அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛டயாப்பருடன் இருக்கும் குழந்தை' ஹிந்தி: கமல் பேச்சு

Updated : அக் 04, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (52)
Advertisement

சென்னை: ஹிந்தி மொழி, டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.





மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், அவ்வபோது தமிழக மற்றும் மத்திய அரசை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உலகளவில் இந்தியாவை அடையாளப்படுத்த பொது மொழி அவசியம். அது ஹிந்தி மொழியாக இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும் என கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல் தரப்பிலும், இந்தியா என்பது அறுசுவை விருந்து, கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும், தயவு செய்து அதை செய்யாதீர்கள், என வீடியோ பதிவை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.




இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது பேசிய கமல், ஹிந்தி மொழி, டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை ஒப்பிடுகையில், இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான். இதை நான் ஏளனமாகக் கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் தான் சொல்கிறேன். அதற்காக ஹிந்தியை திணிக்கக் கூடாது. இவ்வாறு கமல் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-அக்-201909:10:45 IST Report Abuse
Sampath Kumar ஹிந்தி மட்டுமா படிக்க வேண்டும் , கூட தெலுங்கு படிங்க அதுக்கு கொடி பிடிக்க அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம் தெரிவித்து உள்ளார்
Rate this:
Share this comment
Cancel
04-அக்-201922:42:29 IST Report Abuse
நாராயணன் முதல் முறையாக கமலிடமிருந்து ஒரு நல்ல தெளிவான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ்,சென்னை திரு புகழ் அவர்களே???ஹிந்தி போதிக்கும் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடம்தான்...என்ன வித்தியாசம்..அங்கு ஹிந்திக்கு எதுவும் மாற்று உண்டா???அப்போ அதுவும் கட்டாயம் தானே??அங்கு மட்டும் ஏன் அனுமதி..தமிழ்நாட்டில் எதற்கு ஹிந்தி போதிக்கும் பள்ளிகள்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X