பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவங்கியது

Updated : அக் 04, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (42)
Advertisement
India,  corporatised train, Lucknow,Delhi, Tejas Express, தனியார் ரயில்,லக்னோ, டில்லி

லக்னோ: இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ், லக்னோ - புதுடில்லி இடையே இயக்கப்பட்டது.

இந்த ரயிலை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். முதல் நாளில் இந்த ரயிலில் 389 பயணிகள் பயணித்தனர். இன்று(அக்.,4) காலை 6.10 மணிக்கு கிளம்பிய இந்த ரயில், நண்பகல் 12.25 மணிக்கு டில்லி ரயில் நிலையத்தை அடைந்தது. மறுமார்க்கத்தில், டில்லியில் இன்று மாலை 3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோவை வந்து அடையும்.






இந்த ரயில் நாளை(அக்.,5) முதல் வழக்கமாக டில்லியில் இருந்து இயக்கப்பட உள்ளது. லக்னோவில் இருந்து நாளை மறுநாள் முதல் இயக்கப்படும். செவ்வாய் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோவில் இருந்து டில்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
08-அக்-201911:24:54 IST Report Abuse
R KUMAR ரயில்வேயை தனியாருக்கு டெண்டர் விடுவதை சரியாக செய்யவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு முறையாக தெரிவிக்கவில்லை என்றும் தி.மு.க தலைவர் செய்தி வெளியிடுவார். தெரிந்திருந்தால் அவர்களும் பினாமி பெயரில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
07-அக்-201909:22:35 IST Report Abuse
ரத்தினம் திமுகா காரன் ஏரோபிளேன் கம்பெனி, கப்பல் கம்பெனி நடத்தலாம், மத்த தனியார் நடத்த கூடாது. இப்போ இந்த ரயில் கம்பெனிய டெண்டர் விடுங்க, முதல்ல எடுக்குறவன் திமுகா காரனா தான் இருப்பான், அவனுக்கு வக்காலத்து வாங்குறவன் இத்தாலி காங்கிரஸ்,காம்ரேடாதான் இருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
07-அக்-201909:15:04 IST Report Abuse
ரத்தினம் ரயில்வே ஸ்டேஷன்ல எங்க பாத்தாலும் தொழில்சங்க போஸ்டர்தான். நாற அடிக்கிறாங்க. ரயில்ல முதல் வகுப்பிலே பிரயாணம் பண்றவங்கள்ல பாதி பேருக்கு மேல ஓசியில பயணம் போகிற அதன் ஊழியர்கள் தான். சாதாரண மக்கள் போறதில்லை. தனியாருக்கு விட்டா தான் எல்லாம் ஒழுங்கா வேலை பாப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X