மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை

Updated : அக் 04, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி : ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வென்றார். தபால் ஓட்டுகள் மற்றும் கடைசி 3 சுற்றுகள் முழுமையாக, முறையாக எண்ணப்படவில்லை என அப்பாவு, சென்னை

புதுடில்லி : ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வென்றார். தபால் ஓட்டுகள் மற்றும் கடைசி 3 சுற்றுகள் முழுமையாக, முறையாக எண்ணப்படவில்லை என அப்பாவு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை ஐகோர்ட் வளாகத்தின் ஒரு அறையில் மறுவாக்கு எண்ணிக்கை இன்று (அக்.,04) 11.30 மணிக்கு துவங்கியது.


latest tamil news


இதற்கிடையில் மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைக்கோரி எம்எல்ஏ இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அக்.,23 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான முடிவுகளை தேர்தல் கமிஷனோ, மனுதாரர்களோ வெளியிடக் கூடாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அக்.,23 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
07-அக்-201913:29:36 IST Report Abuse
THENNAVAN தி மு க விற்கு எப்போதும் கள்ள ஒட்டு வாக்குசீட்டு மோசடி அல்லது கூடடணிக்கட்சித்தலைவர்களுக்கு பெட்டி கொடுத்து வளைத்து போட்டுக்கொள்வது ஆக மக்களுள் எவரும் விரும்பாமலோ பதவிக்கு வரும் வழிகளை கனகச்சிதமாக தி மு க செய்யும் திமு காவில் மட்டுமே அதிகமான கிரிமினல்கள் ,கிரிமினல் எண்ணம் உள்ள வக்கீல்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
05-அக்-201901:11:18 IST Report Abuse
Raj நீதி தேவதை கண்ணை திறந்து, தராசு இன்றி வழங்கும் நிலையில் இருக்கிறது.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-201901:02:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்போ எந்த கூந்தலுக்கு வழக்கு கூந்தலை நடத்தினாங்கன்னு கேக்குறது அநாகரீகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X