காங்., தோற்கும்: மகா, காங், தலைவர் ஆரூடம்

Updated : அக் 04, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (22)
Advertisement

மும்பை : மும்பையில் உள்ள 3 அல்லது 4 இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்., கட்சி தோற்கும் என அக்கட்சியை சேர்ந்த சஞ்சய் நிரூபம் கூறி உள்ளது காங்., கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.





மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., முன்னாள் எம்.பி.,யும், கட்சியின் மும்பை பிரிவு முன்னாள் தலைவருமான சஞ்சய் நிரூபம் கட்சி தலைமைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வின் போது கட்சி தலைமை என்னுடைய கருத்தை கேட்காமல் புறக்கணித்தது. இன்றைய நிலையில் மும்பையில் 3 அல்லது 4 இடங்களை தவிர மற்ற அனைத்திலும் காங்., தோற்கும். டெபாசிட் கூட கிடைக்காது. ராகுலுக்கு நெருக்கமானவர்களை வெளியேற்ற கட்சிக்குள் சதி நடக்கிறது. அடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் அக்.,24 அன்று உங்களை சந்திக்கிறேன் என்றார்.




தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினரின் கருத்துக்களை கட்சி தலைமை கேட்கவில்லை. டில்லியில் உள்ளவர்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ள தயாராக இல்லை. யோசிக்காமல் எடுத்த இது போன்ற முடிவுகளை நான் கண்டிக்கிறேன். அதனால் தான் நான் பிரசாரம் செய்ய போவதில்லை. கட்சியில் இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்படும். எனது பங்கை கட்சி தலைமை விரும்பவில்லை. கட்சிக்கும் கும்பிடு போட்டு கிளம்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
04-அக்-201922:53:41 IST Report Abuse
வல்வில் ஓரி கனி அவன் இவ்ளோ நாளும் உன்கூடதான இருந்தான்? இப்போ கூட ஒங்க கூடத்தான் இருக்கிறான்? ..நீ என்னமோ ஓனர் மாதிரி சவுண்டு குடுக்கிற? இத ஒங்க ஒனற சொல்லச்சொல்லு..
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
05-அக்-201910:07:46 IST Report Abuse
 Muruga Velஎந்த கனி …....
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
07-அக்-201909:58:54 IST Report Abuse
suresh kumar//எந்த கனி …....//...
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
04-அக்-201922:08:35 IST Report Abuse
madhavan rajan கட்சியினரின் கருத்துக்களை எப்போது காங்கிரஸ் தலைமை கேட்டிருக்கிறது? எதோ புதுக்கதை சொல்கிறார் இவர்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-அக்-201922:04:55 IST Report Abuse
A.George Alphonse இந்த காங்கிரஸ் கட்சியில் no discipline. இதற்கு காரணம் ஸ்திரமான தலைவர் இல்லை.இன்னும் சில நாட்களில் இந்த காங்கிரஸ் கட்சி சுவடு தெரியாமல் நிரந்தரமாக காணாமல் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X