பொது செய்தி

இந்தியா

அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்'

Updated : அக் 04, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்களில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்துார் நிலையம் முதல் இடத்தை பெற்றுள்ளதுஇந்தியாவில், 407 ரயில் நிலையங்களின் துாய்மை திட்டப் பணிகளை, 2016ம் ஆண்டு முதல் ரயில்வே துறை ஆய்வு செய்துவருகிறது. நடப்பு ஆண்டில் இந்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை, 720 ஆக உயர்த்தப்பட்டது.

புதுடில்லி: இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்களில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்துார் நிலையம் முதல் இடத்தை பெற்றுள்ளது



latest tamil news


இந்தியாவில், 407 ரயில் நிலையங்களின் துாய்மை திட்டப் பணிகளை, 2016ம் ஆண்டு முதல் ரயில்வே துறை ஆய்வு செய்துவருகிறது. நடப்பு ஆண்டில் இந்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை, 720 ஆக உயர்த்தப்பட்டது. முதன்முறையாக, புறநகர் ரயில் நிலையங்களிலும் துாய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, நாட்டிலேயே தூய்மையான மற்றும் அசுத்தமான 10 ரயில் நிலையங்களின் பட்டியலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது.
இதில் சுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 ரயில் நிலையங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.


latest tamil news



'டாப்-10' சுத்தமான ரயில் நிலையங்கள்


1. ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
2. ஜோத்பூர் (ராஜஸ்தான்)
3. துர்காபுரா (ராஜஸ்தான்)
4. தவாய் (ஜம்மு)
5. காந்திநகர்-ஜேபி (ராஜஸ்தான்)
6. சுரத்கர்க் (ராஜஸ்தான்)
7. விஜயவாடா (ஆந்திரா)
8. உதய்ப்பூர் சிட்டி (ராஜஸ்தான்)
9. அஜ்மீர் (ராஜஸ்தான்)
10. ஹரித்வார் (உத்தரகாண்ட்)


latest tamil news



'டாப்-10' அசுத்தமான ரயில் நிலையங்கள்


1. பெருங்களத்தூர் (தமிழ்நாடு)
2. கிண்டி (தமிழ்நாடு)
3. சடர் பஜார் (புதுடில்லி)
4. வேளச்சேரி (தமிழ்நாடு)
5. கூடுவாஞ்சேரி (தமிழ்நாடு)
6. சிங்கப்பெருமாள்கோவில் (தமிழ்நாடு)
7. ஒட்டப்பாலம் (கேரளா)
8. பழவந்தாங்கல் (தமிழ்நாடு)
9. ஆராரியா கோர்ட் (பீகார்)
10. குர்ஜா (உ.பி.,)

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-அக்-201912:58:17 IST Report Abuse
bal திராவிட கழக தொண்டர்கள் இருக்குமிடம் கல்லீஜ்தான்...
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
05-அக்-201916:16:01 IST Report Abuse
ரத்தினம் இதற்கு முக்கியமான காரணம் மக்களின் பொறுப்பின்மை, மற்றும் நெகிழியின் உபயோகமும் தான். மற்ற காரணங்கள் அரசின் அலட்சியம், குடிப்பது என்றும் சொல்லலாம். ஹரித்துவார் படு சுத்தமாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் தான் சென்று வந்தேன்.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
05-அக்-201912:44:41 IST Report Abuse
S.P. Barucha இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்களில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. அமைச்சர் ஜெயக்குமாரின் காதுகளில் சுத்தமான ரயில் நிலையங்கள் என்று விழுந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X