சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி கொள்ளை: 2வது கொள்ளையன் கைது

Updated : அக் 04, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (94)
Share
Advertisement
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்னும் மற்றொரு கொள்ளையன் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல் வழக்கம்போல் வேலை நேரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். பின்னர் மறுநாள் காலை 9:00 மணிக்கு ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர்.

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்னும் மற்றொரு கொள்ளையன் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.



latest tamil news


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல் வழக்கம்போல் வேலை நேரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். பின்னர் மறுநாள் காலை 9:00 மணிக்கு ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர். அப்போது தரை தளத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகைக் கடை மேலாளர் அரிராமன் புகார்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா மற்றும் போலீசார் கடையில் விசாரணை நடத்தினர்.


latest tamil news


இந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருவாரூர், மடப்புரம் பாலம் அருகில் நேற்று (அக்., 3) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தனர். அதற்குள் ஒருவர் தப்பி ஓடினார். பிடிப்பட்ட நபரையும், அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியையும் சோதனையிட்டனர். அதில் 5 கிலோ தங்கம் இருந்ததும், அவை லலிதா ஜூவல்லரியின் விலை அட்டையுடன் இருந்ததும் தெரிந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் என தெரிந்தது.


latest tamil news



தப்பியோடிய சுரேஷ் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். சுரேஷின் தாயார், சகோதரிகள் உட்பட 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், நகை கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருவாரூர் அருகே, சுரேஷை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
06-அக்-201921:55:51 IST Report Abuse
Amal Anandan , இந்த கொள்ளையன் முன்பு அதிமுகவில் இருந்த திவாகரன் ஆள்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-அக்-201916:31:29 IST Report Abuse
skv srinivasankrishnaveni வடநாட்டுக்காராதான் கொள்ளைஅடிச்சுருப்பான்னு சொன்னானுக ஆனால் கொள்ளையர்களோ திருவாரூர்க்காரனுக தமிழ்நாட்டுலே கண்ணம்போட்டுக்கொள்ளை அடிப்பது புதுசு இல்லீங்களே பலஇடங்களிலே பார்த்திருக்கோம் உழைக்காமல்பானக்காரனாக பிளான்பண்ணிட்டு மாட்டின்னு முளிக்குறானுக நகைக்கடைக்காரரின் நல்லநேரம் கிடைச்சுட்டுது ஒருத்தனும் வெளியேவரவேகூடாது திருடினகைகளும் போய் சொன்னவாய்களும் திருந்தவே திருந்தது என்பது பழமொழி ப்ளீஸ் வெளியேவிடாதீங்க முடிஞ்சால் சிறையிலேயே கொன்னுடலாம் இவனுக்கேல்லாம் கண்களே கூடாது கைகளும் கூடாது இருந்தால் மீண்டும் இதேதங்குல தொழில் என்று செய்வானுக தீர்த்துக்கட்டவேண்டும்
Rate this:
Cancel
05-அக்-201912:31:09 IST Report Abuse
பச்சையப்பன் ! திருடன் திருட்டு ரயில் கட்டுமரம் என்றால் சரியா?. பார்ப்போம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X