சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.13 கோடி நகை கொள்ளை : 5 பேரிடம் விசாரணை

Updated : அக் 06, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
நகை , திருச்சி, லலிதா, கொள்ளை, விசாரணை, 13 கோடி

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். 'கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள், விரைவில் கைது செய்யப்படுவர்' என, போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி, லலிதா ஜுவல்லரியில், 2ம் தேதி நள்ளிரவு, சுவரில் துளையிட்டு, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டது, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. திருச்சி மாநகர போலீசார், ஏழு தனிப்படைகள் அமைத்து, அவர்களை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, திருவாரூர், விளமல் பாலம் அருகில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பைக்கில் அட்டை பெட்டியுடன் வந்த இருவர், பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.

போலீசார் விரட்டிச் சென்று, கமலாம்பாள் நகரில், பைக்கை மடக்கினர். பின்னால் அமர்ந்து இருந்தவர், அட்டை பெட்டியை போட்டு, தப்பியோடினார். பைக்கை ஓட்டி வந்த, திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரை கைது செய்தனர். அட்டை பெட்டியை பிரித்து பார்த்த போது, அதில், 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. அவை, திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டவை என்பது, அதில் இருந்த, 'பார்கோடு' மூலம் தெரிந்தது. தப்பியோடிய சுரேஷ், 25, திருவாரூர், சீராத்தோப்பை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட, சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், பல கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உடையவர். முருகனின் உறவினர் தான் சுரேஷ். திருச்சியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள், தஞ்சையில் ரகசிய இடத்தில் வைத்து, அதில் ஈடுபட்டவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி கொடுக்கப்பட்ட நகையை, பைக்கில் எடுத்து செல்லும் போது தான், மணிகண்டன், போலீசிடம் சிக்கினார். அந்த நகை, சுரேஷ் பங்காக வந்ததாக தெரிகிறது.

கைதான மணிகண்டனுக்கு, கொள்ளையில் நேரடி தொடர்பு இல்லை என்பதும், சுரேஷ் கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதும் தெரிந்துள்ளது. திருச்சி மாநகர தனிப்படை போலீசார், துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில், மணிகண்டன் மூலம், மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 'விரைவில் அவர்கள் பிடிபடுவர்' என, திருச்சி மாநகர போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில், தப்பி ஓடிய சுரேஷின் தாய் கனகவள்ளி, சீராத்தோப்பைச் சேர்ந்த ரவி, குணா, மாரியப்பன், பார்த்திபன் ஆகிய ஐந்து பேரை, தனிப்படை போலீசார் பிடித்து, தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


'வாக்கி டாக்கி'


லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது, அலைபேசி பயன்படுத்தினால் சிக்கிக் கொள்வோம் என, திட்டமிட்ட கொள்ளையர்கள், அதற்கு பதிலாக தொடர்புக்கு, வாக்கி டாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் எனவும், போலீசார் சந்தேகிக்கின்றனர்.. இதற்கிடையில், கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியில், நேற்று காலை முதல் மதியம் வரை, பல்வேறு நிறுவனங்களின் இன்சூரன்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர்.


போலீசாருக்கு வெகுமதி


கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டனை பிடித்த, திருவாரூர், எஸ்.ஐ., பாரத நேரு தலைமையிலான குழுவினருக்கு, திருச்சி, ஐ.ஜி., வரதராஜு, தஞ்சை டி.ஐ.ஜி., லோகநாதன் மற்றும் தஞ்சை எஸ்.பி., மகேஸ்வரன் ஆகியோர், நேற்று வெகுமதியும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
07-அக்-201906:41:32 IST Report Abuse
rmr வட இந்திய ஆட்களை தவிர்ப்பது நல்லது அவர்களின் நடவடிக்கை மிக மோசமாக உள்ளது , தமிழ்நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தல் இவர்களால் .
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
05-அக்-201918:00:27 IST Report Abuse
jagan இவர்கள் போட்டோவை பார்த்தால் வட இந்தியர் போல் உள்ளது... ஹா ஹா ஹா
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05-அக்-201923:29:31 IST Report Abuse
கதிரழகன், SSLCதிருவாரூர் காரர் தான் திருட்டு கும்பல் எல்லாத்துக்கும் குல சாமி. அடிச்ச பணத்துல குல சாமிக்கு நிதி கொடுத்து கருணை வாங்கிக்கலாமின்னு அங்கிட்டு போயிருப்பாக....
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
05-அக்-201917:44:05 IST Report Abuse
Naren இவனுங்க நூறு கிலோ தங்க அடிச்சவன் மாதிரியா இருக்கான். போங்கைய்யா தமாஷ் பண்ணாதீங்க. சின்ன சின்ன திருட்டுக்கள் செய்தவன்களை பிடித்து உள்ள போட்டு பெரும் கொள்ளைக்காரனை தப்பிக்க விட்டது போல் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X