அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பின் ராதாபுரத்தில் யாருக்கு வெற்றி?

Updated : அக் 06, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (29)
Advertisement
ராதாபுரம், வெற்றி, மேல்முறையீடு, மனு, வெற்றி, தேர்தல்

சென்னை : உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்கள் மற்றும் மூன்று சுற்றுக்களின் ஓட்டுக்கள் மறு எண்ணிக்கை நேற்று நடந்தது.

அ.தி.மு.க. - எம்.எல்.ஏ. இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டதால் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது.


உத்தரவு

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட முடியாத நிலை உள்ளது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பதிவான தபால் ஓட்டுக்கள் மற்றும் மூன்று சுற்றுக்களின் ஓட்டுக்களை மீண்டும் எண்ண உத்தரவிட்டார்.இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை இன்பதுரை தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரப்பட்டது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கும்படி உயர் நீதிமன்றத்திலும் கோரப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை தபால் ஓட்டுக்கள் மற்றும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் 'கன்ட்ரோல் யூனிட்'களும் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை காலை 11:30 மணிக்கு துவங்கியது. விஜிலன்ஸ் பதிவாளர் சாய் சரவணன் ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட்டார். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்துக்கு எம்.எல்.ஏ., இன்பதுரை மற்றும் அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் வந்திருந்தனர்.

தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். எண்ணிக்கை நடந்த அரங்கில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் கட்டமாக தபால் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதன்பின் மூன்று சுற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மாலை 6:30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. பின் அதன் விபரங்களை நீதிபதியிடம் உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.


தடை


ஓட்டு எண்ணிக்கை முடித்த பின் அறிக்கை அளிக்கும்படி பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நீதிபதியிடம் அறிக்கை அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இறுதி உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும். ஆனால் இன்பதுரையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திரபட் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' அளித்த இடைக்கால உத்தரவில் 'ஓட்டு எண்ணிக்கை நடக்கலாம்; முடிவுகளை வெளியிடக் கூடாது' என தடை விதிக்கப்பட்டது.

அடுத்த விசாரணையை வரும் 23க்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் தான் ராதாபுரம் தொகுதி தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
11-அக்-201901:38:21 IST Report Abuse
Ramesh Lal ஓ.பி.எஸ். வழக்கின் தீர்ப்பு மற்றும் இந்த வழக்கின் தீர்ப்பு கண்டிப்பாக வரும்
Rate this:
Share this comment
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
07-அக்-201912:17:18 IST Report Abuse
Kumar இந்தியாவின் தலை வலியை இந்த மன்றங்களால் தான். ஒரு வழக்கும் உருப்படியாக முடித்து வைப்பது கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
05-அக்-201922:38:54 IST Report Abuse
Anandan ஓட்டுகளை என்னினும் - உயர் நீதிமன்றம், முடிவை வெளியிடக்கூடாது - உச்ச நீதிமன்றம். இப்போ நான் ஆதரிக்கிறேன் அண்ணன் H ராஜாவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X