‛டிக்டாக்'-ல் பிரபலம்: பா.ஜ.,வில் சீட்

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (48)
Advertisement

சண்டிகர்: அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவருக்கு பாஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.





அக்.,21ம் தேதி நடக்க உள்ள அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்., சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் பஜன்லாலின் மகன் குல்தீப்புக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் இதுவரை ஒரு தேர்தலில் கூட பஜன்லால் தோல்வி அடைந்ததில்லை. இதனால் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவரை களமிறக்கினால் இந்த முறையும் வெற்றி பெற முடியும் என காங்., கணக்கிட்டுள்ளது.





ஆனால் பா.ஜ., வோ மக்களிடம் பிரபலமாக உள்ள ஒருவரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இதனால் டிக் டாக் செயலியின் மூலம் ஆடிப் பாடி பிரபலமடைந்த சோனாலிக்கு சீட் வழங்கி உள்ளது., 40 வயதாகும் சோனாலி, பா.ஜ.,வில் மகளிர் அணி துணை தலைவராக இருந்து வருகிறார். டிக்டாக் மூலம் பிரபலமான இவருக்கு இணையத்தில் சுமார் 1.4 லட்சம் பின்தோடர்வோரும், 6.5 லட்சம் லைக்குகளும் கிடைக்கிறது. எனவே இவரை வேட்பாளராக நிறுத்தினால், ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கும் என பா.ஜ., கணக்கிட்டுள்ளது.





பாஜ., சார்பில் ஆதம்பூர் தொகுதியில் இவர் எம்.எல்.ஏ வேட்பாளராக களமிறங்கவுள்ளார். இதுகுறித்து கூறிய சோனாலி போகத், 20 வயதில் ஒரு சில டிவி தொடர்களில் நடித்தேன். எனக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். தொகுதி மக்களைக் கவர டிக் டாக் செயலியின் மூலமாகவும் பிரச்சாரத்தை செய்வேன். குறிப்பாக தேசபக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிட உள்ளேன். சமூக நலன்களைக் குறித்த கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க உள்ளேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
05-அக்-201923:25:40 IST Report Abuse
தாண்டவக்கோன் @ ஜெய்ஹிந்த்புரம்: அந்த Koodal முட்டுச்சந்து "வலையில் கீரி"தான் பெண் பேருல எழுதுது. அதுக்குல்லாம் respond பண்ணாதீங்க.
Rate this:
Share this comment
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
06-அக்-201903:40:19 IST Report Abuse
Swaroopa Metha@ தெண்டக்கோன் ஒரு கருத்தாவது தெளிவாக எழுத முடியுமா உன்னால்.. யாரு வலையில் கீரி>>>?...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
07-அக்-201903:34:22 IST Report Abuse
Anandan//@ தெண்டக்கோன் ஒரு கருத்தாவது தெளிவாக எழுத முடியுமா உன்னால்.. யாரு வலையில் கீரி>>>?...// சொம்படிக்கிறதை விட உனக்கு ஏன்னா தெரியும்? அப்படி இன்னதைதான் நீ தெளிவா எழுதிக்கீற?...
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
05-அக்-201922:51:59 IST Report Abuse
Raj திண்டுக்கல் ரீட்டாவுக்கு?
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
05-அக்-201922:24:32 IST Report Abuse
Anandan பாஜகாவை விமர்சிப்பவர்களுக்கு ஒரு கேள்வி. இவ்வளவு நாள் பாஜக சினிமா ஆட்கள் பின்னாடி போகலையா என்ன? அவர்களுக்கு தேவை ஆட்சி அப்போ மக்கள் நலன் அதைப்பத்தி எதுக்கு கவலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X