அரசியல் செய்தி

தமிழ்நாடு

துன்பதுரையான இன்பதுரை: ஸ்டாலின் பேச்சு

Added : அக் 05, 2019 | கருத்துகள் (16)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: அமமுகவை சேர்ந்த 5 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:

சூழ்ச்சி மூலமாக தான் அதிமுக வெற்றி பெற்றது. 2016 ல் தேர்தல் முறையாக நடந்திருந்தால், தி.மு.க., ஆட்சி அமைத்திருக்கும். அப்போது, 15 தொகுதிகளில் திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தினர். ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கையால், அதிமுக எம்.எல்.ஏ.,இன்பதுரை, துன்பதுரையாக மாறிவிட்டார். ராதாபுரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில், அப்பாவுவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். காலையிலேயே, தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே, அதிமுகவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துவிட்டார். பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள்.
தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பா.ஜ., ஆட்சி. நீதிமன்ற உத்தரவு மற்றும் இடைத்தேர்தலுக்கு பின்னர், நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் மீதுபோடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
06-அக்-201915:07:18 IST Report Abuse
s.rajagopalan ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டு சாவடியில் இன்னொரு பெட்டி வைக்கவேண்டும். அதில் போட்டியிடும் அரசியல்வாதிகளிடையே யோக்யமானவன் யார் என்று கேள்வி கேட்கவேண்டும். நிச்சயமாக இரண்டு பே ரும் திருட்டுப்பயலுக ..என் தலையெழுத்து ..ஒருத்தனுக்கு போட வேண்டியிருக்கிறது ....என்ற பதிலே வரும் என்று அடித்து கூறலாம். இதுதான் மக்களிடையே அரசியல்வாதிகளை பற்றிய பொதுவான கருத்து
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
05-அக்-201918:31:56 IST Report Abuse
Bhagat Singh Dasan யோவ் சுடலை துண்டு சீட்டை மாத்துய்யா போர் அடிக்குது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-அக்-201918:08:17 IST Report Abuse
Bhaskaran எண்பதுகளில் அரசினர் தோட்டத்து திமுக அலுவலகத்தில் அன்பழகன் தலைமையில் நூறுபேர் வேறு கட்சியில் இருந்து திமுகவில் இழந்தனர் நானும் என் நண்பனும் நேரில் பார்த்தோம் மறுநாள் முரசொலி செய்தி ஆயிரம்பேர் பேராசிரியர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X