பொது செய்தி

இந்தியா

ஐ.என்.எக்ஸ்., விவகாரம்: முன்னாள் அதிகாரிகள் கவலை

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (62)
Share
Advertisement
INX Media Case, bureaucrats, PM, Narendra Modi, ஐ.என்.எக்ஸ்., முன்னாள் அதிகாரிகள், கவலை

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், நிதி அமைச்சகத்தை சேர்ந்த, நிதித்துறையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு, முன்னாள் அதிகாரிகள் 71 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், 2007ல், மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி, வெளிநாட்டு முதலீடு பெற அனுமதி அளித்ததாக, சிதம்பரம் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், தனித் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டு, டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நிடி ஆயோக் முன்னாள் சிஇஓ சிந்துஸ்ரீ குல்லார், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை முன்னாள் செயலர் அனுப் கே. பூஜாரி, நிதித்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த பிரபோத் சக்சேனா, பொருளாதார விவகாரத்துறையில் செயலராக இருந்த ரபிந்திர பிரசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.


latest tamil news


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் கேபினட் செயலர் சந்திரசேகர், முன்னாள் வெளியுறவு செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலர் சுஜாதா சிங் மற்றும் பஞ்சாப் முன்னாள் டிஜிபி ஜூலியோ ரிபேரியோ உள்ளிட்ட 71 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இது போன்ற நடவடிக்கைகள், நேர்மையான அதிகாரிகள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தடுக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஆவணங்கள் குறித்து விசாரிக்கக்கூடாது என்பதற்கான காலத்தை நிர்ணயிக்க வேண்டும்.

அரசியல் லாபத்திற்காக, அதிகாரிகள் குறி வைக்கப்படுகின்றனர். நேர்மையாக கடமை செய்யும் அதிகாரிகளுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு கிடைப்பது இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகின்றனர். அன்றைய சூழலில் இருந்த அரசின் கொள்கையை செயல்படுத்தியதை தவிர தவறு செய்யாத நேர்மையான அதிகாரிகள் குறி வைத்து தண்டிக்கப்படுகின்றனர்.
இது பணிபுரியும் அதிகாரிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும். மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். பல ஆண்டுகள் கழித்து குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாததால், ஒவ்வொரு முக்கியமான திட்டத்தை ஆய்வு செய்யவும் செயல்படுத்தவும் அதிகாரிகள் தாமதபடுத்தினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
06-அக்-201914:43:28 IST Report Abuse
s.rajagopalan நடந்ததை எப்போ வேணுமானாலும் சொல்லலாம். கை சுத்தமா இருந்தால் ஏன் கவலைப்படவேண்டும் ? ஓய்வு காரணம் காட்டி தப்பிக்க முயற்சி செய்வது ஏற்று கொள்ளமுடியாது.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
06-அக்-201911:00:46 IST Report Abuse
karutthu மனசாட்சியை அடகு வைத்து கொள்ளை அடிக்க துணை போன இவர்களுக்கு மன்னிப்பா ? மன்னிக்காமல் தண்டனை கொடுங்கள்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
06-அக்-201904:03:49 IST Report Abuse
B.s. Pillai The Government has strict rules and regulations and if the high level officers follow it, then there is NO scope for any corruption. In many of the cases, these high level officers become blind and amass wealth disproportionate to their income. The honest officers are0.0001% only in government services. Mnisters are responsible for mega size corruption, but it can not be done by him alone.You need two hands to clap.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X