சிதம்பரத்துக்கு வயிற்றுக்கோளாறு; மருத்துவமனையில் சிகிச்சை

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (87)
Share
Advertisement

புதுடில்லி : திடீரென ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.



latest tamil news



ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தள்ளுபடி செய்தது. சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மனு மீதான விசாரணை வரும், 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த, 10 நாட்களுக்கு, அவர், சிறையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் திகார் சிறையில் இருக்கும் போது தன் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட விரும்பினார். அது தொடர்பாக நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது.


latest tamil news



இந்நிலையில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட சிதம்பரத்திற்கு இன்று ( அக்.,5) திடீரென வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் சோதித்து வருகின்றனர். சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் உயர் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
06-அக்-201912:12:50 IST Report Abuse
krish இவ்வளவு பெரிய ஜெயிலுக்குள்ள, எய்ம்ஸ் ஆஸ்பத்திரியோட, எக்ஸ்டென்ஷன் ஆஸ்பத்திரி ஒன்று கட்டி, சிறையில் காவலில் உள்ளவர்களுக்கு, மருத்துவ வசதி அளிக்க, முயலலாமே....
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06-அக்-201912:03:04 IST Report Abuse
Sridhar பலே கில்லாடி வீட்டு உணவு வேணுங்கும்போதே நினச்சேன், எதோ வில்லங்கத்துக்கு பிளான் பண்ணிருப்பான்னு. எப்படியெல்லாம் யோசிச்சு செயல்படறாங்கப்பா? அமெரிக்காவுல ஒரு புது மருந்து இருக்காம். அத சாப்பிட்டா, கொஞ்ச நேரத்துக்கு நெஞ்சு வலி அப்புறம் மாரடைப்பு போன்ற தோற்றத்தை கொடுக்குமாம். விட்டா அதைக்கூட உணவுல கலந்து கொடுப்பாங்க போல? ஜெயிலேந்து வெளியே வர என்னென்னல்லாம் பண்றங்கய்யா?
Rate this:
Cancel
06-அக்-201911:58:47 IST Report Abuse
R. SUBRAMANIAN ஒருவேளை வீட்டு சாப்பாடு ஒவ்வாமை யோ என்னவோ.மருத்துவர் சிறை உணவு to be contained என்று பரிந்துரைக்கவும். நலம் பெற திருவீசரை வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X