சிதம்பரத்துக்கு வயிற்றுக்கோளாறு; மருத்துவமனையில் சிகிச்சை| Dinamalar

சிதம்பரத்துக்கு வயிற்றுக்கோளாறு; மருத்துவமனையில் சிகிச்சை

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (87)

புதுடில்லி : திடீரென ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.






ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தள்ளுபடி செய்தது. சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மனு மீதான விசாரணை வரும், 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த, 10 நாட்களுக்கு, அவர், சிறையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் திகார் சிறையில் இருக்கும் போது தன் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட விரும்பினார். அது தொடர்பாக நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது.





இந்நிலையில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட சிதம்பரத்திற்கு இன்று ( அக்.,5) திடீரென வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் சோதித்து வருகின்றனர். சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் உயர் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X