நிலவின் புதிய புகைப்படங்கள் வெளியிட்டது, 'இஸ்ரோ'

Updated : அக் 07, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெங்களூரு : 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'ஆர்பிட்டர்' கருவி எடுத்த, நிலவின் புதிய புகைப்படங்களை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 2 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள், ஜூலையில் விண்ணில் ஏவினர். விண்கலத்திலிருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், விக்ரம் லேண்டர் கருவி, நிலவை
ஆர்பிட்டர், சந்திர 2, நிலவு, புகைப்படம், வெளியீடு

பெங்களூரு : 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'ஆர்பிட்டர்' கருவி எடுத்த, நிலவின் புதிய புகைப்படங்களை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 2 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள், ஜூலையில் விண்ணில் ஏவினர். விண்கலத்திலிருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், விக்ரம் லேண்டர் கருவி, நிலவை நெருங்கியபோது, அதிலிருந்து, 'சிக்னல்' கிடைக்கவில்லை. இதனால், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.

ஆனாலும், சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த ஆர்பிட்டர், நிலவை, 100 கி.மீ., துாரத்துக்கு மேலிருந்து, அதிக சக்திவாய்ந்த கேமராவில் எடுத்த புதிய புகைப்படங்களை, இஸ்ரோ, நேற்று வெளியிட்டது.

அதில், நிலவின் தரை பகுதியில், கற்பாறைகள், விரிசல்கள், எரிமலையின் வாய் பகுதி போன்றவை காணப்படுகின்றன.
'இஸ்ரோ' தலைவர் சிவன், தனியார் விமானத்தில், சாதாரண வகுப்பில் பயணம் செய்யும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், விமான பணிப் பெண்கள், அவருடன் கலந்துரையாடுவது, 'செல்பி' எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விமானத்துக்குள் நுழையும் சிவனுக்கு, சக பயணியர், கைதட்டி உற்சாகப்படுத்தும் காட்சியும் அதில் உள்ளது. இஸ்ரோ தலைவர், விமானத்தில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதும், அவரது எளிமையான நடவடிக்கையும், தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில், பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-201921:19:50 IST Report Abuse
ஆப்பு நல்லவேளை விக்ரம் லேண்டரை மட்டும் பாக்கப் போனாரு.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
06-அக்-201915:53:47 IST Report Abuse
தமிழ் மைந்தன் மோடிக்கு இந்த ராக்கெட்டை சரியாக விட தெரியவில்லை....... ராவுல் அல்லது சுடலையை விட்டுருந்தா நல்ல விட்டிருப்பாங்க.....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-அக்-201914:37:56 IST Report Abuse
Pugazh V வீணான மக்களின் வரிப்பணம். உதவாக்கரை படங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X