'விக்'கிற்குள் தங்கம் கடத்திய கேரள இளைஞர் பிடிபட்டார்

Added : அக் 06, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 'விக்'கிற்குள் தங்கம் கடத்திய கேரள இளைஞர் பிடிபட்டார்

கொச்சி:தலையில் வைத்திருந்த, 'விக்'கிற்குள் தங்கத்தை வைத்து கடத்தி வர முயன்ற கேரள இளைஞரை, கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர், நவுஷாத். இவர், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து, விமானம் மூலம், கேரளாவின் கொச்சிக்கு வந்தார். விமானத்தில் இருந்து இறங்கி, வெளியே வந்து கொண்டிருந்த நவுஷாத்தின் நடவடிக்கையில், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தினர். 'நான் சட்ட விரோதமாக எதையும் கடத்தி வரவில்லை' என, நவுஷாத் மறுத்தார்.ஆனாலும் சமாதானம் அடையாத அதிகாரிகள், நவுஷாத்தை சோதனையிட்டனர். அப்போது, நவுஷாத்தின் தலைமுடி சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டனர். அதை சோதனையிட்ட போது, அவர், 'விக்' எனப்படும் செயற்கை முடி வைத்திருப்பது தெரிந்தது. அதை விலக்கிய போது, அந்த விக்கிற்குள், 1.13 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. தலையின் நடுப்பகுதியில் உள்ள முடியை மொட்டை அடித்துவிட்டு, அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து, அதன் மேல் விக் வைத்து மறைத்து எடுத்து வந்ததை, அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.இதையடுத்து, நவுஷாத்திடம், விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-அக்-201911:09:10 IST Report Abuse
A.George Alphonse மகா கேவலமான கடத்தல் மன்னர்கள் எப்படித்தான் இது போன்ற குறுக்கு வழி யோசனைகள் வருகின்றதோ அவர்களின் ஆண்டவனுக்குதான் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
08-அக்-201915:17:57 IST Report Abuse
Amreen அனைத்து சட்ட விரோத செயல்கள், தேச துரோக செயல்கள், ஆகியவற்றில் அமைதி மார்க்கம் நம்பர் 1
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
08-அக்-201906:29:33 IST Report Abuse
Rangiem N Annamalai கையும் களவுமாக அல்ல தலைமுடியும் களவுமாக என போட்டு இருக்கலாம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X