துாத்துக்குடி:''தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிடுகிறார்,'' என, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
துாத்துக்குடியில், அவர் கூறியதாவது: 'அ.தி.மு.க., ஆட்சியில், பா.ஜ.,வுக்கு பங்களிப்பு உள்ளது' என, ஸ்டாலின் எவ்வாறு சொல்கிறார் என, தெரியவில்லை.அவருடைய பேச்சு, நகைச்சுவையாக இருக்கிறது. கூட்டுறவு சங்கத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி, அ.தி.மு.க., வெற்றி பெற்றது போல, உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீத வெற்றி பெறுவோம்.உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு, ஏதாவது வழி இருக்கிறதா என, ஸ்டாலின் திட்டமிடுகிறார். அவர், என்ன திட்டமிட்டிருந்தாலும், அதை தவிடுபொடியாக்கி, தமிழக அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.