பலே திருட்டு; வங்கி மோசடியில் மாஜி நிர்வாகி

Updated : அக் 06, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (25)
Advertisement

மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, பி.எம்.சி., எனப்படும், பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எச்.டி.ஐ.எல்., எனப்படும், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் கட்டமைப்பு என்ற தனியார், 'ரியல் எஸ்டேட்' நிறுவனத்துக்கு, 21 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் வாயிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி, 'பலே' மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது குறித்து, கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகள் மற்றும் 'ரியல் எஸ்டேட்' அதிபர்களிடம், போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பி.எம்.சி., எனப்படும், பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு, 137 கிளைகளும், 11 ஆயிரம் கோடி ரூபாய் வைப்பு தொகையும் உள்ளன. மும்பையைச் சேர்ந்த, எச்.டி.ஐ.எல்., எனப்படும், வீட்டு வசதி மற்றும் கட்டமைப்பு என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு, இந்த வங்கி, பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி, மோசடியில் ஈடுபட்டதை, ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.


இழப்பு

இதையடுத்து, பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க, ரிசர்வ் வங்கி, சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த மோசடி குறித்து, பொருளாதார தடுப்பு பிரிவு போலீசாரிடம், புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், பி.எம்.சி., வங்கியில் இருந்து, எச்.டி.ஐ.எல்., நிறுவனம், பல்லாயிரக்கணக்கான ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாதது தெரியவந்தது. இதன் மூலம், வங்கிக்கு, 4,355 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இந்நிலையில், எச்.டி. ஐ.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் வதாவன் ஆகியோருக்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 'சம்மன்' அனுப்பினர்.

இதையடுத்து, கடந்த, 3ம் தேதி, அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணையின் போது, அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததை அடுத்து, இருவரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களை, வரும், 9 வரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், எச்.டி.ஐ.எல்., நிறுவனத்திற்கு சொந்தமான, 3,500 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பி.எம்.சி., வங்கியின் முன்னாள் தலைவர், வார்யம் சிங், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் உட்பட, மூத்த அதிகாரிகள் பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜாய் தாமஸை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை, 17 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதிவழங்கியது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கண்டுபிடிப்புஇது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது: எச்.டி.ஐ.எல்., நிறுவனத்திற்கு, பி.எம்.சி., வங்கியில், 44 கடன் கணக்குகள் உள்ளன. வங்கியில் இருந்து பெறும் கடன் தொகையை மறைக்க, எச்.டி.ஐ.எல்., நிறுவனம், வங்கியின் உதவியுடன், 21 ஆயிரம் போலி கணக்குகள் உருவாக்கி, அதன் மூலம், கடன் தொகை பெற்றுள்ளது. இந்த போலி கணக்குகளின் விபரங்கள், வங்கியின் உள் தணிக்கை மற்றும் ரிசர்வ் வங்கியின் தணிக்கையில் தெரியாத வண்ணம், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எச்.டி.ஐ.எல்., நிறுவனம் திருப்பித் தர வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் கடன், மூடி மறைக்கப்பட்டுள்ளது; பின், வாராக் கடனாக மாற்றப்பட்டு உள்ளது.

மேலும், எச்.டி.ஐ.எல்., நிறுவன அதிபர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில், 2,000 கோடி ரூபாய் கடன் பணத்தை, பி.எம்.சி., வங்கி நிர்வாகிகள், நேரடியாக, 'டிபாசிட்' செய்ததும் தெரியவந்துள்ளது. வங்கியின் இயக்குனர்கள் குழு, நிர்வாகிகள் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் ஆகியோருக்கு தெரிந்தே, இந்த மோசடி நடைபெற்றுள்ளது. பி.எம்.சி., வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், 100 கோடி ரூபாய்க்கு பங்குகள் வாங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, எச்.டி.ஐ.எல்., நிறுவன கடன் மோசடிக்கு துணை போனதற்கு, லஞ்ச மாக பெறப்பட்டதா என விசாரணை நடத்தி ருகிறோம்.
இந்த பங்குகள், 2007 - 2017 காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடர்பாக, மேலும் பலர், விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


12 சொகுசு கார்கள் பறிமுதல்!

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள எச்.டி.ஐ.எல்., நிறுவனத்திற்கு சொந்தமான, ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ., பெண்ட்லி காண்டினெண்டல் ஜி.டீ. உட்பட, மொத்தம் 12 விலை உயர்ந்த சொகுசு கார்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-201921:17:37 IST Report Abuse
ஆப்பு மாங்கா மடைனுங்க.. இந்தியாவின் ரோடுங்கள்ள மாட்டுவண்டி ஸ்பீடில்தான் ஓட்ட முடியும். 6 கோடி ரூவாய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி எங்கே ஓட்டப் போறாங்க?
Rate this:
Share this comment
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
07-அக்-201908:48:02 IST Report Abuse
Rajசும்மா பணம் கெடச்சா F -16 கூட வாங்குவாங்க....
Rate this:
Share this comment
Cancel
Ganesh Kumar - AUCKLAND,நியூ சிலாந்து
06-அக்-201916:37:57 IST Report Abuse
Ganesh Kumar மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் - மோடி அரசின் நடவடிக்கைகளால் - வாகன விற்பனை குறையத்தானே செய்யும்
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
06-அக்-201914:46:59 IST Report Abuse
RR Iyengar இவன மாதிரி ஆளுங்க தான் உயர் பண மதிப்பிழப்பின்போது அரசியல் வியாதிகள், வரியேப்பாளர்கள், லஞ்ச ஊழலில் திளைத்து கொழுத்த அரசு ஊழியர்களின் நோட்டுக்களை மாற்ற உதவியது ... உடனே பாருங்க ... ஐயகோ, சுதந்திர நாட்டில் கொள்ளையடிக்கக்கூட உரிமையில்லையா, மக்கள் விரோத பாஜக அரசு னு சமூக வலைத்தளங்களில் பொய்ப்புரளிகளை பரப்பியே சம்பாதிக்கும் கூட்டம் கூக்குரலிடும் ... அதையெல்லாம் காதுலயே வாங்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X