'நான், சிறு காமெடி பாத்திரத்தில் நடித்த படத்தை, கதாநாயகனாக நடித்ததாக கூறி வெளியிடுகின்றனர்' என, நடிகர் யோகிபாபு புகார் கூறியுள்ளார்.
யோகிபாபு அறிக்கை:
நான், தர்மபிரபு, கூர்கா போன்ற படங்களில் மட்டுமே, கதையின் நாயகனாக நடித்தேன். அதை தொடர்ந்து, பல படங்களில், 'காமெடியன்' ஆக மட்டுமே நடித்து வருகிறேன்.
இந்நிலையில், பட்லர் பாலு என்ற படத்தில், யோகிபாபு நாயகனாக நடிப்பதாக, செய்தி வெளியாகி உள்ளது.
அத்துடன், எனக்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனத்தை, எஸ்.பி.ராஜ்குமார் எழுதி கொடுக்கிறார் என்றும், செய்தி வெளியானது.
பட்லர் பாலு படத்தில், சிறு நகைச்சுவை பாத்திரத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன், வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடித்தேன்.
தற்போது, அப்படத்தின் நாயகன் என, செய்தி வெளியிட்டுள்ளனர். இதில், துளியும் உண்மை இல்லை.
எனக்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை, யாரும் எழுதித் தருவதில்லை. இயக்குனர் தரும் வசனங்களை, என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றி பேசுகிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே, என் ஆசை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE