காஷ்மீர் விவகாரம்; எல்லை தாண்டும் ஊர்வலம்

Updated : அக் 06, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (35)
Advertisement

ஜம்மு: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் எல்லை தாண்டும் ஊர்வலத்தை துவக்கியுள்ளனர். இதனால் எல்லையில் பரபரப்பு நிலவுகிறது.


கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் 2 மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரச்சனை ஏதும் எழாமல் இருக்க மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது. பல இடங்களில் இன்னும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. 250 க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்று கூட அனுமதியின் பேரில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்அப்துல்லா குடும்பத்தினரை அவரது கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். காஷ்மீர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் மாநிலத்தில் இதுவரை பெரிய அளவில் சொல்லக்கூடிய அளவிற்கு வன்முறை ஏதும் இல்லை என்பது மிக பாராட்டுக்குரியதே. ஏனெனில் கடந்த காலத்தில் அதாவது கவர்னர் ஆட்சியிலும் மெகபூபா ஆட்சியிலும் கல்எறியும் சம்பவங்கள் பல அரங்கேறின.


மேலும் பாதுகாப்பு படையினர் மீது சில உள்ளூர் கும்பல் தாக்குதல் நடத்தியது. பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரயைாக்கப்பட்டன என்பதை நாம் மறக்க முடியாது.மாநிலத்தில் பெருவாரியான எதிர்ப்பு வெளியே கிளம்பாத பட்சத்தில் பாகிஸ்தான் இதில் குளிர் காய நினைக்கிறது. இதற்கு இம்ரான்கானின் சமீபத்திய பேச்சே சான்று. இந்நிலையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்கள் சில அமைப்பினர் போர்வையில் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதாவது ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியினர் எல்லை தாண்டும் ஊர்வலத்தை துவக்கியுள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் இந்திய எல்லை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.


ஐ.நா., கண்காணிப்பு குழு


இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி பிரமுகர் ரபீக்தர் நிருபர்களிடம் கூறுகையில்: நாங்கள் அமைதி வழி போராட்டம் நடத்துகிறோம். இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தினரை கண்காணிக்கும் ஐ.நா., குழுவினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். எங்கள் மீது யாரும் ராணுவ நடவடிக்கை எடுக்க கூடாது என இரு நாடுகளுக்கும் ஐ.நா., கேட்டுள்ளது என்றார்.

இதற்கிடையில் இந்த ஊர்வலத்தினர் கத்தோக்கி பகுதியை அடைந்தவுடன் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்துவர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-201909:21:41 IST Report Abuse
கண்ணோட்டம் மின்சார வேலி அமைத்து விட்டால் முடிந்தது வேலை!
Rate this:
Share this comment
Cancel
06-அக்-201923:18:13 IST Report Abuse
mannandhai They were stopped already before LoC. Nothing to be watched seriously.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
06-அக்-201922:20:53 IST Report Abuse
adalarasan IMRAAN, THOONDIVITTU, THEEVARAVAADIKALAI IVVAARU ANUPPUKIRAAR?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X