புதுடில்லி : இந்தியாவிடம் ரபேல் விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்க செல்லும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தசரா தினத்தில் சாஸ்த்ர பூஜையில் பங்கேற்க உள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல், 'ரபேல்' ரக போர் விமானம், வரும், 8ம் தேதி ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸ் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது, ரபேல் போர் விமானத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் செல்கிறார்.
பாரிஸ் நகரில் உள்ள மெரிக்னாக் பகுதியில் உள்ள விமானப் படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. அப்போது, ரபேல் போர் விமானத்தில், ராஜ்நாத் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், தசரா தினத்தன்று அங்கு 'சாஸ்திரா பூஜா' எனப்படும் (போர் ஆயுதங்களை வைத்து பூஜித்தல்) சிறப்பு 'ஆயுத பூஜை' செய்யவுள்ளார். மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது ஆண்டுதோறும் தசரா நாளில் இதுபோன்ற பூஜைகளை ராஜ்நாத் சிங் செய்து வந்துள்ளார்.
தற்போது ராணுவ அமைச்சராக பதவியேற்றபின் முதன்முதலாக பிரான்சில் நடக்கும் சாஸ்திரா பூஜையில் பங்கேற்று அதனை சிறப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE