ரபேலை வைத்து 'சாஸ்திரா பூஜை' செய்கிறார் ராஜ்நாத்

Updated : அக் 06, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : பாரிஸில் நடக்கும் ரபேல் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வில், பங்கேற்க செல்லும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு 'சாஸ்த்ரா பூஜை' நடத்த உள்ளார்.ஐரோப்பிய நாடான பிரான்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல், 'ரபேல்' ரக போர் விமானம், வரும், 8ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸ் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது,

புதுடில்லி : பாரிஸில் நடக்கும் ரபேல் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வில், பங்கேற்க செல்லும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு 'சாஸ்த்ரா பூஜை' நடத்த உள்ளார்.



latest tamil news



ஐரோப்பிய நாடான பிரான்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல், 'ரபேல்' ரக போர் விமானம், வரும், 8ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸ் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது, ரபேல் போர் விமானத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் செல்கிறார்.


latest tamil news



பாரிஸ் நகரில் உள்ள மெரிக்னாக் பகுதியில் உள்ள விமானப் படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதில் கலந்து கொள்ளும் ராஜ்நாத்சிங், முதல் விமானத்தை பெற்ற பின்பு, போர் ஆயுதங்களை வைத்து பூஜிக்கும் 'சாஸ்திரா பூஜை' செய்ய திட்டமிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, ஆண்டுதோறும் தசரா நாளில் இதுபோன்ற பூஜைகளை ராஜ்நாத் சிங் செய்வது வழக்கம்.

இந்திய விமானப்படைக்கு, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன், 2016 செப்., மாதம், அதன்படி, முதல் விமானம் வரும் 8ம் தேதி ஒப்படைக்கப்பட்ட போதும், அடுத்த ஆண்டு மே மாதம் தான் முதல் 4 விமானங்கள் இந்தியா வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
07-அக்-201901:51:56 IST Report Abuse
முட்டாள் முல்லா யாரப்பா..அது... வீனாப்போன மணி, சுடலை... டவுசர..கலட்டுனது????
Rate this:
Cancel
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
07-அக்-201901:25:45 IST Report Abuse
Swaroopa Metha இந்த பூஜையில் தேங்காய் மூடி சுண்டலாவது பப்புவுக்கு குடுப்பீங்களா..? தரேன்னு சொன்னா பக்கத்துல பட்டாயாவுலதான் இருக்கு பயபுள்ள, ஒடனே வந்துருவான்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-அக்-201917:20:23 IST Report Abuse
தமிழவேல் ஓரி, காளாஞ்சி ன்னு சொல்லு....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-அக்-201900:26:05 IST Report Abuse
Pugazh V இந்த செய்தி யில் கூட மதவெறி கருத்து கள் சில பாஜக வாசகர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.ஏன் இப்படி மதவெறி ஜாதிவெறி இனவெறி பிடித்து அலைகிறார் கள்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X