புதுடில்லி : பாரிஸில் நடக்கும் ரபேல் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வில், பங்கேற்க செல்லும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு 'சாஸ்த்ரா பூஜை' நடத்த உள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல், 'ரபேல்' ரக போர் விமானம், வரும், 8ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸ் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது, ரபேல் போர் விமானத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் செல்கிறார்.

பாரிஸ் நகரில் உள்ள மெரிக்னாக் பகுதியில் உள்ள விமானப் படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதில் கலந்து கொள்ளும் ராஜ்நாத்சிங், முதல் விமானத்தை பெற்ற பின்பு, போர் ஆயுதங்களை வைத்து பூஜிக்கும் 'சாஸ்திரா பூஜை' செய்ய திட்டமிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, ஆண்டுதோறும் தசரா நாளில் இதுபோன்ற பூஜைகளை ராஜ்நாத் சிங் செய்வது வழக்கம்.
இந்திய விமானப்படைக்கு, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன், 2016 செப்., மாதம், அதன்படி, முதல் விமானம் வரும் 8ம் தேதி ஒப்படைக்கப்பட்ட போதும், அடுத்த ஆண்டு மே மாதம் தான் முதல் 4 விமானங்கள் இந்தியா வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE