பொது செய்தி

தமிழ்நாடு

100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் நடத்திய வழிபாடு

Updated : அக் 07, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (42)
Advertisement
 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் நடத்திய வழிபாடு

ராமநாதபுரம் : கமுதி அருகே நள்ளிரவில், 100 ஆடுகளை பலியிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், மூன்றாவது வாரத்தில், கன்னிப்பெண் அம்மனுக்கு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும், நள்ளிரவு பூஜை நடக்கும்.

இப்பூஜையில், 100 ஆடுகளை பலியிட்டு, தங்களது வயல்களில் விளைந்த நெல்லை கைக்குத்தல் மூலம் பச்சரிசி எடுத்து, அதை சமைத்து, சாதத்தை உருண்டைகளாக பிடித்து, வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம் நடந்த நள்ளிரவு பூஜையில், பங்கேற்ற ஆண்களுக்கு பச்சரிசி சாதம், அசைவ விருந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. கமுதி மற்றும் சுற்றியுள்ள, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
10-அக்-201921:08:10 IST Report Abuse
Rajesh யாரு என்ன சாப்பிடம்னு என்பது அவரவரின் இஷ்டம், அதேபோல் என்ன சாப்பிட்டு என்ன மாதிரி ஆகணும்னு என்பதும் அவரவரின் இஷ்டம். இதில் வந்து நீ இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்பது வக்கிரத்தின் உச்சக்கட்டம்...... எனக்கு பிடிக்கவில்லையென்றால் நான் அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டும் அதை விடுத்தது குற்றம் சொல்லக்கூடாது.. இதை செய்தாலே மன நிறைவு கிடைக்கும்..........
Rate this:
Share this comment
Cancel
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
10-அக்-201901:12:31 IST Report Abuse
Senthil - Proud to be an Indian நாங்கள் எங்கள் மூதாதையர் வாழ்ந்த வழியிலேயே வாழ்கிறோம் .... அவர்களும் ஹிந்து மதத்தின் அடிப்படையில் கடவுளை வணங்கினார்கள் , ஆடுகளை பலியிட்டு சொந்த பந்தங்களுடன் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தார்கள் .... ஆனால் இப்போது பணத்துக்குக்காக வேறு மதத்தில் சேர்க்கிறார்கள் , அது அவர்கள் இஷ்டம் , அதற்காக யாரும் எங்களின் ஹிந்து வழிபாடு முறையில் எந்த கருத்தும் தெரிவிக்க உரிமை இல்லை ..... எங்கள் மதம் எங்களுக்கு பெரிது , வழிபாடு முறையும் அதுபோலத்தான் ...... சண்டே ஆகிவிட்டால் கறி கடையை தேடுபவர்கள் எல்லாம் .... நாங்கள் வழிபடும் முறையை குற்றம் சொல்ல அருகதை இல்லை ...
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
10-அக்-201912:28:37 IST Report Abuse
s.rajagopalanஆயிரம் சொல்லுங்கள் ...நான் பரம ஆத்திகன்தான்.. .. பாவாடைகளையும், குல்லாக்காரர்களையும் , வீரமணி கூட்டத்தையும் ஆதரிப்பவனல்ல ....யிருந்தாலும் அந்த 100 ஆடுகள் எப்படி ஓலமிட்டிருக்கும் என்ற நினைக்கையில் உள்ளம் பதறுது. இந்த வழக்கத்தையும் வழி பாட்டையும் காலத்திற்கேற்றவாறு மாற்றிகொள்வது தவறில்லையே. இதை செய்த கையோடு நம் தாய் , பசு மாட்டை கொல்கிறவர்களை குற்றம் சொல்வது சரியாக படவில்லையே ....?...
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
09-அக்-201900:26:21 IST Report Abuse
Vetri Vel யாரை சொல்லியாவது.. நம்ம வயிறு நிறையுதா.. அதை பாருங்கள்... யாருக்கும் தொந்தரவு தருவதில்லை நாங்கள் இங்கே... நாங்கள் என்ன சாப்பிடணும் னு யாரும் சொல்லி தர தேவையும் இல்லை...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-அக்-201918:31:05 IST Report Abuse
கல்யாணராமன் சு."நாங்கள்" ....... "நாங்கள்" அப்படின்னு சொல்றீங்களே, யாரு அந்த "நாங்கள்" ?? இரண்டாவது, "நீங்கள்" என்ன சொல்ல வரீங்க? ..........
Rate this:
Share this comment
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
10-அக்-201910:35:22 IST Report Abuse
D. Selestine Arputharajஅது சரிதான்.... என்னமோ ஹிந்துக்களை மத்த மதத்தினர் கொடுமை படுத்துவதுபோல இவனுங்க பேசுறாங்க...எங்க ஊருல இன்னும் ஹிந்துக்களும் மத்த மதத்தினரும் ஒண்ணாகத்தான் இருக்கிறாங்க....நாங்க நாங்கனு சொல்ற சில சுயநலவாதிங்கதான் மத சண்டைக்கு வலி வகுக்கிறாங்க .........
Rate this:
Share this comment
periasamy - Doha,கத்தார்
13-அக்-201915:18:54 IST Report Abuse
periasamyஇந்து என்பது மதமல்ல அது இந்தியன் அவ்வளவுதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X