பொது செய்தி

இந்தியா

பாக்.,குக்கு எதிரான நடவடிக்கை: அபிநந்தன் குழுவுக்கு சிறப்பு விருது

Updated : அக் 08, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : பாகிஸ்தானின் பாலகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பாக்., விமானப் படை விமானங்கள் அத்துமீறி நுழைய முயன்றதை தடுத்து நிறுத்திய, இந்திய விமானப் படை குழுக்களுக்கு, விமானப்படை தினத்தில் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பாக்., பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி
அபிநந்தன், விருது, பாக்., நடவடிக்கை,தாக்குதல், விமானபடை

புதுடில்லி : பாகிஸ்தானின் பாலகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பாக்., விமானப் படை விமானங்கள் அத்துமீறி நுழைய முயன்றதை தடுத்து நிறுத்திய, இந்திய விமானப் படை குழுக்களுக்கு, விமானப்படை தினத்தில் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

இந்தாண்டு துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பாக்., பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் விமானப் படை, பிப்., 26ல் பாக்., எல்லைக்குள் புகுந்து, பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது.

அதற்கடுத்த நாள், பாக்., விமானப்படை விமானங்கள், நம் எல்லைக்குள் அத்துமீறு நுழைந்தன. அதை, நம் விமானப்படை தடுத்து நிறுத்தி, துரத்தி அடித்தது. அப்போது, விமானப் படையின் விக் கமாண்டர் அபிநந்தன், பாக்., விமானப் படைக்கு சொந்தமான, எப் - 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அந்த சம்பவத்தில், அவர் பயணித்த, மிக் - 21 ரக விமானம் சேதமடைந்தது. பாராசூட் மூலம் தப்பிய அவர், பாக்., எல்லைக்குள் விழுந்தார். மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய விமானப் படை தினம், நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளையொட்டி நடைபெறும் விழாவில், அபிநந்தன் அடங்கிய, 51 ஸ்குவாட்ரன் குழுவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. அப்பிரிவின் தலைவராக உள்ள, குரூப் கேப்டன், சதீஷ் பவாருக்கு, இந்த விருதை, விமானப்படை தளபதி, ஆர்.கே.எஸ். பதுாரியா வழங்க உள்ளார்.மேலும், பாக்., விமானப் படை விமானங்களை துரத்தி அடித்த, 601 சிக்னல் பிரிவுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

இந்தப் பிரிவின் தலைவர் மின்டி அகர்வால் , விருதைப் பெறுகிறார். பாலகோட்டில் தாக்குதல் நடத்திய, மிராஜ் 2000 போர் விமானங்கள் அடங்கிய, ஒன்பதாவது ஸ்குவாட்ரனுக்கும், சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.


செங்குத்தாக பறந்து அசத்தல்


இந்திய விமானப் படையின், 87வது ஆண்டு விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் அருகே உள்ள, ஹிண்டார் விமானப் படை தளத்தில், நேற்று முழு ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது, சுகோய் 300 ரக விமானக் குழுவினர், செங்குத்தாக பறந்து சென்று, புதிதாக விமானப் படை தளபதியாக பதவியேற்றுள்ள, பதுாரியாவுக்கு, 'சல்யூட்' மரியாதை அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
07-அக்-201922:50:36 IST Report Abuse
Siva ராணுவ வீரர்கள் என்றும் போற்ற பட வேண்டியவர்கள்...... சல்யூட்...
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
07-அக்-201909:57:51 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் ஒருத்தர் சொன்னாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X