பொது செய்தி

இந்தியா

பி.பி.சி.எல் உட்பட பல நிறுவனங்கள் தனியார் மயம்?

Updated : அக் 07, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
பி.பி.சி.எல், பெட்ரோல் , தனியார்மயம், எண்ணெய் நிறுவனங்கள்

புதுடில்லி : மத்திய அரசு எண்ணெய் நிறுவனமான பி.பி.சி.எல். எனப்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் தனியார் மயமாக உள்ளது. இந்த நிறுவனத்தை தேசியமயமாக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை 2016ல் மத்திய அரசு ரத்து செய்தது. அதன் மூலம் தனியார் மயமாக்குவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது. வரும் நவம்பரில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பி.பி.சி.எல். உள்பட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மாக்கும் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

பி.பி.சி.எல். உள்பட பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் மூலமாகவே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் 'காஸ்' உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன. நாட்டின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 24.94 கோடி டன்னாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் மூலம் 65 ஆயிரத்து 665 பெட்ரோல் பங்குகளும் 24 ஆயிரத்து 26 சமையல் காஸ் விநியோகஸ்தர்களும் உள்ளனர்.

இதில் 3.83 கோடி டன் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் உள்ளது பி.பி.சி.எல். நிறுவனம் மஹாராஷ்டிராவின் மும்பை கேரளாவின் கொச்சி மத்திய பிரதேசத்தின் பினா அசாமின் நுமாலிகர் ஆகிய இடங்களில் இதற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. மொத்தம் 15 ஆயிரத்து 78 பெட்ரோல் பங்குகள் மற்றும் 6004 சமையல் காஸ் வினியோகஸ்தர்களும் கொண்டது இந்த நிறுவனம்.

தற்போது பி.பி.சி.எல். நிறுவனத்தில் மத்திய அரசு 53.3 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. பி.பி.சி.எல். நிறுவனத்தின் தற்போதைய மொத்த சந்தை மதிப்பு 1.11 லட்சம் கோடி ரூபாய். இதில் மத்திய அரசின் பங்கு 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 'பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் 1.05 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும்' என இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி.எல். பங்கு விற்பனை மூலம் மொத்த இலக்கில் மூன்றில் ஒரு பங்கை எட்ட முடியும்.

அதனால் பி.பி.சி.எல். நிறுவனத்தை முழுவதும் தனியார் மயமாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும் சில நிறுவனங்களையும் முழுமையாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பரில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:தற்போது நாட்டின் எண்ணெய் துறையில் பொதுத் துறை நிறுவனங்களின் ஆதிக்கமே உள்ளது. தனியார் நிறுவனங்களும் களம் இறங்கினால் போட்டி ஏற்படும். மேலும் உலகின் மிகப் பெரிய பெட்ரோலியப் பொருட்கள் சந்தைகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. அதனால் வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் 'அராம்கோ' நிறுவனம் ஐரோப்பிய நாடான பிரான்சின் 'டோட்டல்' நிறுவனம் உள்ளிட்டவை இந்தியாவில் இந்தத் துறையில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளன.

இந்த நிறுவனங்கள் முதலீடு செய்வதால் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் போட்டி ஏற்படும் என்பதால் மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும். மத்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் நிதி கிடைக்கும். அதனால் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.


2003ல் துவங்கியது


பி.பி.சி.எல். மற்றும் எச்.பி.சி.எல். எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்க பா.ஜ.வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டார். அதற்கான முயற்சிகள் துவங்கியபோது வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'இந்த நிறுவனங்களை தேசியமயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை நீக்காமல் இவற்றை தனியார் மயமாக்க முடியாது' என 2003ல் தீர்ப்பு அளித்தது. 'ராயல் டச் ஷெல் பர்மா ஆயில் கம்பெனி ஏசியாடிக் பெட்ரோலியம்' நிறுவனங்கள் இணைந்து 1920ல் உருவாக்கியதுதான் 'பர்மா ஷெல்' நிறுவனம். கடந்த 1976ல் இதை தேசியமயமாக்கி பி.பி.சி.எல். என்ற நிறுவனத்தை உருவாக்க பார்லியில் சட்டம் இயற்றப்பட்டது.

அதேபோல் 'எஸ்ஸோ ஸ்டாண்டர்ட் லுக் இந்தியா' நிறுவனங்கள் துவங்கிய 'எஸ்ஸோ' நிறுவனத்தை எச்.பி.சி.எல். என மாற்றி தேசியமயமாக்க 1974ல் பார்லியில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் 2016ல் மத்திய அரசு பார்லியில் ஒரு சட்ட மசோதா கொண்டு வந்தது. அதன்படி தேவையில்லாத நடைமுறையில் இல்லாத 187 பழைய சட்டங்கள் ரத்தாகின. அந்த 187 சட்டங்களில் பி.பி.சி.எல். மற்றும் எச்.பி.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்களை தேசியமாக்கும் சட்டங்களும் அடங்கும்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-201922:48:36 IST Report Abuse
ஆப்பு BPCL நிறுவனத்தை தனியாருக்கு விற்பதாக நியூஸ் வந்து அதன் பங்குகள் ஒரே நாளில் எக்கச்சக்கமா விலையேறி நிறைய பேர் லாபம் பாது ஒரு மாசமாச்சு. இன்னிக்கிதான் நியூஸ் வருது.
Rate this:
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
07-அக்-201922:40:59 IST Report Abuse
Mahendran TC ஒரு நிறுவனத்தை லாபகரமாக நடத்தும் அம்பானிகளுக்கும் , அடானிகளுக்கும் இருக்கும் திறமை , அறிவு , புத்திசாலித்தனம் ஏன் நம்ம அரசியல் தலைவர்களுக்கும் , மத்திய , மாநில அரசுகளுக்கு இல்லையா ? அம்பானிகளும், அடானிகளும் என்ன வேற்று கிரகவாசிகளா ,இல்லை அதிபுத்திசாலிகளா ? இந்திய நாட்டையே தனியாருக்கு விற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
07-அக்-201919:09:38 IST Report Abuse
rmr வேலை செய்யாத அரசு அதிகாரிகளை வீட்டுக்கு துரதுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X