புதிய கல்விக் கொள்கைகளை அமல்படுத்த மாநிலங்கள் போர்க்கொடி

Updated : அக் 08, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : 'புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, மத்திய அரசு கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, மாநிலங்கள் போர்க் கொடி தூக்கியுள்ளன. தற்போது அமலில் உள்ள தேசிய கல்விக் கொள்கை, 1986ல் உருவாக்கப்பட்டது. பின், 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அறிக்கை தாக்கல் 'நாடு முழுவதும் புதியக் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்' என, 2014ல் நடந்த
புதிய கல்விக்கொள்கை, போர்க்கொடி, மாநில அரசு, நிதி ஒதுக்கீடு

புதுடில்லி : 'புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, மத்திய அரசு கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, மாநிலங்கள் போர்க் கொடி தூக்கியுள்ளன. தற்போது அமலில் உள்ள தேசிய கல்விக் கொள்கை, 1986ல் உருவாக்கப்பட்டது. பின், 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.


அறிக்கை தாக்கல்


'நாடு முழுவதும் புதியக் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்' என, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., அறிவித்தது. தேர்தலில் வென்று ஆட்சி அமைந்த பிறகு, இதற்கான முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஈடுபட்டது. முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு, பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்தது.

ஆனால், அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களுக்கு, எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பா.ஜ., தலைமையிலான அரசு, இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம், தன் அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்தக் குழுவின், வரைவு கல்விக் கொள்கை, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுவரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


நிதி இல்லை


இந்த நிலையில், இந்தக் கல்விக் கொள்கை குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய கல்வி வாரிய ஆலோசனைக் குழுவின் கூட்டம், டில்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான, மாநிலக் கல்வி அமைச்சர்கள், 'தேசியக் கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை வரவேற்கிறோம். ஆனால், இவற்றை செயல்படுத்துவதற்கு மாநில அரசுகளிடம் போதிய நிதி இல்லை. 'இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, வரைவு கொள்கையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை' என, கருத்து கூறியுள்ளனர்.


கூட்டத்தில், மாநில அமைச்சர்கள் கூறியதாவது:

பீஹார் கல்வி அமைச்சர் கே.என்.பிரசாத் வர்மா: இந்தக் கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதில், நிதி மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி திட்டம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது, மாநிலத்துக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும்.

கர்நாடக கல்வி அமைச்சர், சி.என். அஸ்வத் நாராயணன்: கல்விக் கொள்கை திட்டங்களை செயல்படுத்துவதற்கு, அதிக நிதி தேவைப்படுகிறது. தற்போது கிடைக்கும் வருவாய், மானியங்களுக்காகவே பெருமளவு செலவிடப்படும் நிலை உள்ளது.

டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா: மத்திய அரசின் விருப்பங்கள், இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி குறித்து, ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. நம் நாட்டில், கல்விக் கொள்கையானது மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், நிதிதான் மோசமாக உள்ளது.

ஒடிசா கல்வி அமைச்சர், அருண்குமார் சாஹோ: திட்டங்களை செயல்படுவதற்கான நிதி குறித்தும் விரிவாக திட்டமிட வேண்டும். முன்னாள் மாணவர்கள் மூலம் நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றை செயல்படுத்தலாம்.

ஆந்திரா கல்வி அமைச்சர் ஆடிமுலாபு சுரேஷ்: முன்பள்ளி கல்வி திட்டம், அங்கன்வாடி ஆகியவை, அதிக நிதி தேவைப்படுபவை. மத்திய அரசும் நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும். மத்திய பிரதேச கல்வி அமைச்சர், பிரபுராம் சவுத்ரி: அதிக நிதியை ஒதுக்க வேண்டும். அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்.

மிஜோரம் கல்வி அமைச்சர் லால் சந்தா ரால்டே : ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் திணறுகிறோம். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த உரிய நிதி உதவி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
08-அக்-201903:09:04 IST Report Abuse
Amal Anandan இன்னும் கொஞ்ச நாளில் முதல் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வு என்று இந்த அறிவாளிகள் சொன்னாலும் சொல்வார்கள்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-அக்-201917:30:43 IST Report Abuse
Poongavoor Raghupathy If Central Govt gives money any Education Policy is accep to many State Leaders. So Money gets all Principles whether good or bad implemented. How can we give a better education to the children when money is the focus and not the education. After seeing these are we not forced to think why we got independence from English rule. Now the God is the only savior.
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
07-அக்-201916:41:39 IST Report Abuse
Naren புதிய கல்வி கொள்கைகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வை நீக்க வேண்டும். மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தற்போதைய பாட புத்தகங்கள் மூன்று டெர்ம்களாக இருக்கிறது. அவற்றில் மாற்றம் வேண்டும். வருடம் முழுவதும் ஒரே புத்தகத்தை படித்து தேர்வு எழுதும் வண்ணம் மாற்றியமைக்க வேண்டும். மேலும் இந்த முறை தொடர்ந்தால் மாணவர்களின் புத்தகங்களை படித்து கிரகித்து நினைவில் கொண்டு வரும் ஆற்றல் குறைந்து போய்விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X