தாய்லாந்தில் ராகுல்: பிரசாரத்துக்கு முழுக்கு?

Updated : அக் 08, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (28+ 111)
Advertisement
ராகுல், பிரசாரம், முழுக்கு, சட்டசபை தேர்தல், ராஜினாமா, தாய்லாந்து

புதுடில்லி : மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், திடீரென தாய்லாந்துக்கு சென்றுள்ளது, அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை, ராகுல் ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையே, வரும், 21ல், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் மந்தம் நிலவுகிறது.

ஹரியானா மாநில காங்., தலைவராக இருந்த அசோக் தன்வார், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். ராகுல் ஆதரவாளர்கள், காங்கிரசில் புறக்கணிக்கப்படுவதாக, அவர் பரபரப்பான புகாரை தெரிவித்தார். இந்நிலையில், ராகுல் நேற்று, ஆசிய நாடான, தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன. இரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், பிரசாரத்துக்கு வராமல், ராகுல் வெளிநாட்டுக்கு சென்றது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28+ 111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
07-அக்-201920:30:58 IST Report Abuse
R KUMAR நல்ல முடிவு. இந்தியாவில் இருந்து இவர் பிரச்சாரம் செய்தால் மட்டும் காங்கிரஸ் ஒன்றும் பெரிதாக ஜெயித்துவிடப்போவதில்லை. என்றும் அது ஒரு பெரிய சைபர்தான்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
07-அக்-201918:49:11 IST Report Abuse
 N.Purushothaman TOI செய்திப்படி ராவுல் தாய்லாந்தில் இருந்து கம்போடியா சென்று “விபாசனா “ அதாவது தியானத்தில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெற்று அசுர பலத்துடன் வரப்போறாராம் ....மன மாற்றம் மற்றும் அறிவு முதிர்ச்சியுடன் திரும்புவார் என நம்புவோம் ....
Rate this:
Share this comment
Cancel
amalan - thanjavur,டிஜிபௌசி
07-அக்-201918:01:36 IST Report Abuse
amalan காங்கிரஸ் வளர்வதற்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X