'ரபேல்' நாளை ஒப்படைப்பு; பாரிசில் ராஜ்நாத் ஆயுத பூஜை

Updated : அக் 08, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
ரபேல்,ஒப்படைப்பு,பாரிஸ்,ராஜ்நாத்,ஆயுத பூஜை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், 'ரபேல்' ரக போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெறுவதற்காக சென்றுள்ள, பா.ஜ., மூத்த தலைவர்களில்ஒருவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், ஆயுத பூஜையை அங்கு கொண்டாட உள்ளார்.

நம் விமானப் படைக்கு, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாடுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும் இந்த அதி நவீன போர் விமானத்தின், முதல் விமானம், பாரிசில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதை பெறுவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரிஸ் செல்கிறார். அக்., 8, விமானப் படை தினமாகவும் உள்ளது. மேலும், அன்று ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. உள்துறை அமைச்சராக அவர் பணியாற்றியபோது, ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையைக் கொண்டாடுவது வழக்கம். அதுபோல, தற்போதும் பாரிசில் ஆயுத பூஜையைக் கொண்டாட, ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார்.


'மிகுந்த வலிமை பெறும்'


எம்.பி.டி.ஏ., எனப்படும், ஐரோப்பிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: ரபேல் ஒப்பந்தத்தின்படி, போர் விமானத்துடன், 'மெடியோர்' மற்றும் 'ஸ்கால்ப்' என்ற விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணையும், இந்தியா வாங்க உள்ளது. இந்த அதிநவீன போர் விமானத்துடன், இந்த ஏவுகணைகளும் கிடைப்பதால், இந்திய விமானப் படையின் பலம் மிகவும் வலுப்பெறும்.இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharman - chennai,இந்தியா
07-அக்-201914:32:05 IST Report Abuse
sudharman ரபேல் இருந்தால் நாம் வலிமையானவர்களாக ஆகுவோம் . அப்படினா ஏற்கனவே ரபேல் வைத்து இருப்பவனும் வலிமை ஆனவன். தயாரித்தவனும் வலிமையானவன். அவனுக்கு கூடுதலாக குறைகளும் தெரியும். s400 சீனாவும் வைத்து இருக்கிறான். ரபேல் கூட f16 அண்ட் f17 இந்தியாவிலேயே உற்பத்தி ஆக போகிறது. அதுக்கும் நாம அட்வான்ஸ் கொடுத்துட்டோம். சீனா 5th தலைமுறை விமானமும் செய்துட்டான். அது போதாகுறைக்கு ரஷ்யாவின் புடின் கூறியது சீனாவிற்கு கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை தடுக்கும் முறைகளை கற்று தந்து கொண்டு இருக்கிறோம் என்றான். அந்த தொழில்நுட்பம் அமெரிக்கா ரஷ்யா அடுத்தபடியாக சீனாவிற்கு. அப்படினா நாம எங்க இருக்கிறோம். ரஷ்யா நம்மை விட சீனாவிற்கு தான் முக்கியத்துவம் தருவான். அமெரிக்கா எதிர்ப்புக்காக. அமெரிக்கா நமக்கு உதவுவான் சீனா ரஷ்யா எதிர்ப்பிற்காக. ஆனால் நாம அமெரிக்கா அல்லது ரஷ்யாவையே நம்ம்பி இருக்கணும். நாம தான் நம்ம முன்னேற்றத்தை கவனிக்கணும். வெறும் பாகிஸ்தானை எதிர்ப்பது அல்ல. பெரும் திருடனும் துரோகியுமாக இருப்பது சீனாவே.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-அக்-201908:00:32 IST Report Abuse
s.maria alphonse pandian விமானப்படை தினம் அன்று இந்த புதிய ரக போர் விமானம் பெற்றுக் கொள்ளப்படுகிறது என்பதே சரியானது...மற்றவைகள் "சொருகல்"கள்...
Rate this:
Nai-tamlar - chennai,இந்தியா
07-அக்-201918:12:40 IST Report Abuse
Nai-tamlar, மற்ற இடைச்செருகல் என்பது என்ன ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X