6 பேர் கொலை; சத்தமின்றி, 'தீர்த்து'க் கட்டிய 'சயனைடு லேடி'

Updated : அக் 07, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (63)
Share
Advertisement
பாலக்காடு: சொத்துக்காகவும், நினைத்தவரை அடையும் எண்ணத்திலும், 14 ஆண்டுகளில், ஆறு பேரை, 'சயனைடு' கொடுத்து கொன்ற, கேரள பெண் கைது செய்யப்பட்டார்.கேரளா, கோழிக்கோடு மாவட்டம், தாமரச்சேரி கூடத்தாயியைச் சேர்ந்தவர் டோம் தாமஸ், 66. இவரது மனைவி அன்னம்மா, 57. இருவரும், கல்வித் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு, ராய் தாமஸ், ரோஜோ என, இரு மகன்கள்; ரெஞ்சி என்ற மகள்

பாலக்காடு: சொத்துக்காகவும், நினைத்தவரை அடையும் எண்ணத்திலும், 14 ஆண்டுகளில், ஆறு பேரை, 'சயனைடு' கொடுத்து கொன்ற, கேரள பெண் கைது செய்யப்பட்டார்.latest tamil newsகேரளா, கோழிக்கோடு மாவட்டம், தாமரச்சேரி கூடத்தாயியைச் சேர்ந்தவர் டோம் தாமஸ், 66. இவரது மனைவி அன்னம்மா, 57. இருவரும், கல்வித் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு, ராய் தாமஸ், ரோஜோ என, இரு மகன்கள்; ரெஞ்சி என்ற மகள் உள்ளார்.கடந்த, 22 ஆண்டுக்கு முன், ராய் தாமஸ், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோலி ஜோசப், 47, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர்.

அன்னம்மாவின் குடும்ப அதிகாரமும், சொத்துக்களும் தன் கைக்கு வர வேண்டும் என, எண்ணிய ஜோலி, 2002 ஆக., 22ல், ஆட்டுக்கால் சூப் வைத்து, சயனைடு விஷம் கலந்து, மாமியாருக்கு கொடுத்தார். அதை குடித்த அன்னம்மா இறந்து விட்டார்; யாருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை.அன்னம்மா இறந்து, ஆறு ஆண்டுகளான நிலையில், மாமனாருக்கும், ஜோலிக்கும் சொத்து தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. கடந்த, 2008 ஆக., 26ல், மரவள்ளி கிழங்கில் சயனைடு கலந்து, மாமனாரை கொலை செய்தார். இந்த கொலையும் வெளியில் தெரியவில்லை.


latest tamil newsஉறவினர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தாலும், யாரும் பிரச்னை செய்யவில்லை.தொடர்ந்து, கணவர் ராய் தாமஸ் இறந்து விட்டால், முழு சொத்தும் தனக்கு வந்து விடும் என கணக்கிட்ட ஜோலி, 2011 செப்., 30ல், கணவருக்கு உணவிலும், கடலையிலும் சயனைடு கலந்து கொடுத்தார். பிரேத பரிசோதனையில் சயனைடு கண்டறியப்பட்டாலும், தற்கொலை என, வழக்கு முடிக்கப்பட்டது. ராய் மரணத்தின்போது, பிரேத பரிசோதனைக்கு வலியுறுத்திய அன்னம்மாவின் சகோதரன் மாத்யூ, 68, தனக்கு வில்லனாக வரலாம் எனக் கருதிய ஜோலி, அவரையும் கொல்ல திட்டமிட்டார்.


latest tamil newsமாத்யூ, 2014 பிப்., 24ல், இடுக்கியில், தன் வீட்டில் தனித்திருந்த வேளையில், அருகேயுள்ள தாய் வீட்டுக்கு வந்த ஜோலி, காபியில் சயனைடை கலந்து, மாத்யூவை கொலை செய்தார். யாருக்கும் சந்தேகம் எழவில்லை. இதையடுத்து, மாமனார் டோம் தாமசின் சகோதரன் மகனும், ஆசிரியருமான ஷாஜு சக்கரியாசை அடைய வேண்டும் என்ற எண்ணம், ஜோலிக்கு ஏற்பட்டது. அதற்கு இடையூறாக இருக்கும் அவரது மனைவி, மகனை கொல்ல முடிவெடுத்தார்.

ரொட்டியுடன், கோழி குழம்பில் சயனைடை கலந்து, ஷாஜுவின், 2 வயது மகன் ஆல்பைனுக்கு, அளித்தார். சாப்பிட்ட ஆல்பைன், 2014 மே 3ல் உயிரிழந்தான். ஒன்றரை ஆண்டுக்கு பின், 2016 ஜன., 11ல், ஷாஜு சக்கரியாசின் மனைவி சிலி, 44, என்பவரை கொல்ல திட்டம் தீட்டினார். ஜோலி, சிலி, ஷாஜு மூவரும் பல் மருத்துவரை பார்க்கச் சென்றனர். ஷாஜு, மருத்துவர் அறைக்கு சென்ற நேரம் பார்த்து, வெளியில் இருந்த ஜோலி, சிலிக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்தார்.

வாயில் நுரையுடன் ஜோலியின் மடியில் மயங்கி விழுந்த சிலி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். சிலி இறந்து ஓராண்டுக்கு பின், 2017ல் ஜோலி, தானாக முன்வந்து, ஷாஜுவை திருமணம் செய்து கொண்டார். குடும்ப உறுப்பினர்கள் ஒரே மாதிரி, மர்மமான முறையில் பலியானதில் சந்தேகம் கொண்ட, டோம் தாமசின் மற்றொரு மகன் ரோஜோ, ஜூலை மாதம், கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தார். இதன் மீதான விசாரணையில் தான், ஜோலி கொலைகள் குறித்து, வெளியுலகுக்கு தெரியவந்தது.


latest tamil newsஎஸ்.ஐ., ஜீவன் ஜார்ஜ் கூறியதாவது: கணவர் கொலைக்காக கைது செய்யப்பட்டுள்ள ஜோலி, மற்ற கொலைகளையும் ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு, சயனைடு அளித்து உதவிய மாத்யூ என்ற ஷாஜி, 44, அவரது நண்பன், நகை பட்டறையில் பணியாற்றும் பிரஜிகுமார், 48, ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்யூவுக்கும், ஜோலிக்கும், பல்லாண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. என்.ஐ.டி.,யில் பணியாற்றுவது போல் குடும்பத்தினரை ஏமாற்றிய ஜோலி, உண்மையில், ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்துள்ளார். ராய் தாமஸின் சகோதரி, ரெஞ்சிக்கும் கஷாயத்தில் சயனைடு கொடுத்து கொல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அவர் உடனடியாக வாந்தியெடுத்து, பல லிட்டர் தண்ணீரை குடித்து விட்டதால், தப்பி விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-201916:36:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்த கேடிக்கும் தாங்களேன் ஒரு கோப்பை சையனைடு கலந்த சாயா
Rate this:
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
10-அக்-201911:19:02 IST Report Abuse
Pillai Rm வாவ் .....அடுத்த படத்துக்கு கத ரெடி
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
10-அக்-201908:59:42 IST Report Abuse
ராஜேஷ் புதுசு புதுசா கண்டுபுங்க மனித இனத்தை அழிக்க
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று செய்வோம் என்று பள்ளிக்கூடத்தில் படித்ததை வேறுவிதமாக புரிந்துகொண்டுவிட்டாளோ என்னமோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X