அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி - ஜின்பின் சந்திப்பு சென்னை; காஞ்சியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Updated : அக் 08, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
மோடி,ஜின்பின்,சந்திப்பு,சென்னை,காஞ்சி,உச்சக்கட்ட பாதுகாப்பு

மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள, பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை, காஞ்சிபுரம் முழுவதும், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இருவரும், சென்னை விமான நிலையம் வரும் போதும், அங்கிருந்து செல்லும் போதும், பயணியர் மற்றும் சரக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், வரும், 12, 13ம் தேதிகளில் சந்திக்க உள்ளனர். இதற்காக, ஜி ஜின்பிங், 11ம் தேதி, மதியம், 1:30 மணிக்கு, சென்னை, மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தடைகிறார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், 11:45க்கு, கிண்டியில் உள்ள, 'ஐ.டி.சி., கிராண்ட் சோழா' ஓட்டலுக்கு செல்கிறார். ஓய்வுக்கு பின், மாலை, 4:00க்கு மாமல்லபுரம் செல்கிறார்; 5:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு பகுதியை பார்வையிடுகிறார். மாலை, 5:20க்கு, ஐந்து ரதம் பகுதிக்கு செல்கிறார். 5:45க்கு கடற்கரை கோவிலுக்கு செல்கிறார்.

முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக்கு பின், இரவு, 9:00க்கு, கிண்டி, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலுக்கு திரும்புகிறார். 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். பிரதமர் மோடியை சந்தித்த பின், மதிய உணவு முடித்து, மதியம், 1:15க்கு, சென்னை விமான பழைய விமான நிலையம் திரும்புகிறார்.

ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜி ஜின்பிங் மற்றும் மோடி இருவரும், விமான நிலையத்தில் தரை இறங்கும் போதும், புறப்படும்போதும், 10 நிமிடத்திற்கு பயணியர் மற்றும் சரக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


கமிஷனர் ஆலோசனை


மோடி மற்றும் ஜி ஜின்பிங் வருகையை ஒட்டி, எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், கூடுதல், இணை, துணை கமிஷனர்கள் பங்கேற்றனர். அப்போது, சீன அதிபர் தங்க உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டல் மற்றும் அதை சுற்றி எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, மாமல்லபுரம் வரை, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழித்தடங்கள் முழுவதிலும், ஐந்து நாட்களுக்கு, போலீசார் ரகசிய ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, கமிஷனர் அலுவலகத்தில், சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தீவிர வாகன சோதனை டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு


போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., திரிபாதி அனுப்பியுள்ள சுற்றிக்கை: மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, தமிழகம் முழுவதும், தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். சந்தேக நபர்கள் சிக்கினால், தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தேவையின்றி, போலீசாருக்கு விடுமுறை அளிக்க கூடாது.

தமிழகத்தில் உள்ள, அனைத்து பகுதிகளும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். பழைய குற்றவாளிகள், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்வையாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
08-அக்-201914:29:17 IST Report Abuse
Krishnamurthy Venkatesan சாதாரண பொதுமக்களை துன்ப படுத்தாமல் (அவர்களின் பிரயாணம் போன்றவற்றில்) செல்வதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
07-அக்-201922:54:49 IST Report Abuse
ஆப்பு முன்னாடியெல்லாம் விமானநிலையம் , நாலு ரோடுங்களை மூடி டார்ச்சர் குடுப்பாங்க. சீன அதிபர் வருவதால் தமிழகத்தையே இழுத்து மூடிருவாங்க போலிருக்கே... கண்ணாஇ வேற நொறுங்கி விழாம இருக்கணும்.
Rate this:
Cancel
07-அக்-201922:51:23 IST Report Abuse
ஆப்பு சீன அதிபரே...இப்புடியே தமிழகத்தில் நாறும் ஊர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வருகை தாருங்கள். உங்க வருகையினால் எங்கள் ஊர்களெல்லாம் நல்லா தூய்மையாகி பொலிவு பெறும். உங்களுக்கு கிடி நன்றி.. நமஸ்காரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X