பொது செய்தி

இந்தியா

பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்

Added : அக் 07, 2019 | கருத்துகள் (98)
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை முதல்வர் சந்திரசேகரராவ் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.






தெலுங்கானாவில் 2வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரசகேர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு பஸ் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்தார் முதல்வர். போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்த வழங்க வேண்டும். புதிய பணியாட்கள் நியமனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர்.






ஆனால் அனைவரும் பணிக்கு திரும்புமாறு சனிக்கிழமை மாலை வரை அரசு தரப்பில் இறுதி கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் ஸ்டிரக்கை கைவிடவில்லை.

இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஸடிரைக்கில் ஈடுபட்ட 48, 000 பேரை மொத்தமாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

மேலும் நிலைமையை சமாளிக்க அரசு பஸ்களை லீசுக்கு விடுவது என்றும், 4 ஆயிரம் தனியார் பஸ்களுக்கு கூடுதல் அனுமதியும் வழங்கியுள்ளார் முதல்வர்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
10-அக்-201912:03:04 IST Report Abuse
Dinesh Pandian தெலுங்கானா 2 லட்சம் கோடி கடனில் உள்ளது இலவசம் கொடுத்து ....அடுத்து 4 லட்சம் கோடி டார்கெட்
Rate this:
Share this comment
Cancel
GS GS - Chennai,இந்தியா
09-அக்-201912:08:24 IST Report Abuse
GS GS 48000 பேர் என்றால் தலா ஒரு குடும்பத்தில் சரா சரி 3 பேர் என்று வைத்து கொண்டால் மொத்தம் 144000 பேரின் வாழ்வு கேள்வி குறி யாகிவிட்டது , இவர்களை காப்பதும் முதல்வரின் கடமை என்பதை மறுக்க முடியாது .
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
10-அக்-201913:16:34 IST Report Abuse
Arasuதுரோகிகளை தண்டிக்கவேண்டும் காப்பாற்ற கூடாது. இந்த வேலை கூட இல்லாம எத்தனை இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
08-அக்-201903:45:18 IST Report Abuse
Dr.C.S.Rangarajan மனம் எவ்வளவு வேதனை அடையும் என்பதை தொழிலாளர்கள் அடைந்ததை முதல் அமைச்சரின் மந்திரிசபையை கூண்டோடு டிஸ்மிஸ் செய்தால் அன்று தெரியும் 'வலி' என்றால் என்ன என?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X