மரங்களை வெட்ட சுப்ரீம் கோர்ட் தடை

Updated : அக் 07, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை, ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரம் வெட்ட சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால சிறப்பு அமர்வு தடை விதித்தது.மும்பையின் நுரையீரல் எனப்படும் ஆரே வனத்தில் மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்காக சுமார் 2700 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் மற்றும் மாணவர்கள்

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை, ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரம் வெட்ட சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால சிறப்பு அமர்வு தடை விதித்தது.latest tamil newsமும்பையின் நுரையீரல் எனப்படும் ஆரே வனத்தில் மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்காக சுமார் 2700 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல மாதங்கள் நடந்த இந்த வழக்கை மும்பை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அன்றிரவே மரங்களை வெட்டும் பணி தொடங்கியது.


latest tamil newsஇதனால் ஆவேசமடைந்த சமூக ஆர்வலர்கள், மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். மேலும், போராட்டம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் சார்பில் கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விடுமுறை கால சிறப்பு அமர்வு அருண்மிஷ்ரா தலைமையிலான நீதிபதிகள் இன்று (அக்., 07) விசாரித்தது.


latest tamil newsஅப்போது நீதிபதிகள் கூறியதாவது: சுற்றுச்சூழல் குறித்து நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதியளித்ததை எதிர்க்கிறோம். மரங்களை வெட்ட மஹாராஷ்டிரா அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களையும் விடுவிக்க உத்தரவிடுகிறேன். இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், இந்த வழக்கை அக்., 21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
08-அக்-201904:11:56 IST Report Abuse
RM 2700 மரம் வெட்டி உயிரோடு சாய்த்தாயி்ற்று. சுற்றசூழல் ஐநா வில், கைத்தட்டலுக்கு.வாயிலேயே வானத்தில் தோரணம்!ஊழல் ஒழிப்பு பிரசாரம். PMC bank ல் 24000 கோடீ பி.ஜே.பி. பிரமுகர் மோசடீ!இன்னும் தோண்ட தோண்ட எத்தனை யோ
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
08-அக்-201901:01:43 IST Report Abuse
Naren குடியிருப்பு பகுதிகளில் நகரம் விஸ்தரிப்புக்கு ஏன் வெட்டக் கூடாது என்று பலர் கூறியிருந்தனர். அவர்களுக்கு நான் படித்து தெரிந்த ஒரு விசயத்தை இங்கு கூறுகிறேன். ஆக்சிஜன் அளவை செல்கள் உணர்ந்து, தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என்ற மருத்துவ கண்டுபிடுப்புகளுக்காக 2019 நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப் பட்டதாக படித்தோம். அவை மனிதன் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் குறைவான ஆக்ஸிஜன் அளவுகளால் திசுக்களில் உள்ள செல்கள் வளர் அல்லது சிதை மாற்றம் பெரும் அதன் விளைவாகவே கேன்சர் போன்ற வியாதிகள் வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சரி அதற்கு என்ன சல்யூஷன். ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளான மரங்கள் அடர்ந்த பகுதிகளில் பிராணயாமம் மற்றும் யோகா செய்யலாம். வீடுகளில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் நிறைய மரம் வளர்த்து பயன் பெறலாம். குறிப்பாக அதிகம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மரங்களான புன்னை மரம், வேப்ப மரம் வளர்க்கலாம். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் அவசியம் உணர்ந்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை. அவை நமது தலைமுறையினர் நோய் நொடியில்லாத நல் வாழ்வு பெற நாம் சேர்த்து வைக்கும் சொத்து என கருதுங்கள். முடிந்தவரை வாழும் மரங்களை வெட்டாமல் மனித தலைமுறைகளுக்கு வாழ்வளியுங்கள்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
08-அக்-201902:53:29 IST Report Abuse
Amal Anandanஇந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஒருவர் உள்ளார் அவர் காணொளிகளை பார்த்தால் இப்படி பேச மாட்டீர்கள், அந்த அறிவாளி மரங்களை வெட்டிவிட்டு 8 வழி சாலை போட்டால் பயண தூரம் குறைவதால் கார்பன் அளவு குறையும் என்ற அறிவை கண்டுபிடிப்பை அள்ளிவீசியுள்ளார் அவர் பெயர் மாரிதாஸ்....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-அக்-201920:20:18 IST Report Abuse
Girija மும்பை கோர்ட்டில் அனுமதி கொடுத்த நீதிபதி உச்சநீதிமன்றத்திற்கு வேலை இல்லை என்று நினைத்தாரோ?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-அக்-201922:36:05 IST Report Abuse
தமிழவேல் கவர்னர் போஸ்ட் காலியா இருக்குமோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X