பொது செய்தி

இந்தியா

இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரம் வெளியீடு

Updated : அக் 07, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி: இந்தியா - சுவிட்சர்லாந்து இடையேயான ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின், முதல் பட்டியல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.






ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள், கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக விளங்குகின்றன. இந்த வங்கிகளில் கணக்கு துவங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை. அதனால் கறுப்பு பண முதலைகள், ஏதாவது ஒரு அடையாளத்தின் அடிப்படையில் கணக்கு துவங்கி, தங்கள் சொந்த நாட்டில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, இந்த வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்குவது வழக்கம்.

நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், இந்த கறுப்பு பணத்தை மீட்கவும், பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.





இதன் ஒருபகுதியாக, இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துக்கும், 75 நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பட்டியலை அந்நாடு இந்தியாவுக்கு அளித்துள்ளது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இப்பட்டியல் மூலம் கண்டறிய முடியும்.

பட்டியலில், தற்போது செயல்நிலையில் இருக்கும் கணக்குகள் மட்டுமன்றி, 2018ம் ஆண்டு வரை மூடப்பட்ட கணக்குகளின் விவரங்களும் கிடைத்துள்ளன. இரண்டாவது பட்டியல் 2020 செப்., மாதத்தில் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
08-அக்-201909:34:44 IST Report Abuse
இந்தியன் kumar தனி நபர் சொத்து உச்ச வரம்பு சட்டம் கொண்டு வர பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
08-அக்-201909:33:27 IST Report Abuse
இந்தியன் kumar வெளிநாட்டில் முறைகேடான கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்கள்
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
07-அக்-201923:15:27 IST Report Abuse
venkatan பலர் பினாமி பெயரில்...இன்னும் பலர் நம் நாட்டில் இல்லை...வெற்று கணக்குப் புத்தகத்தில் புரட்டி பார்த்தால் இருப்பு பூஜ்யம்..அடுத்த பட்டியலுக்கு அவகாசம்...இருட்டடிப்பு செய்ய.எல்லாம் உப்புக்கு சப்பாணிபோல..வெறும் பயல்களை அதாவது "இன்சொல்வன்சி பாபர்'களை என்ன செய்ய..சட்ட நடவடிக்கைகளை வெறும் ஆளை சிறையில் வைத்து கிளாசிக் வசதியை அளிக்க பொது ப் பணம் கூடுதல் செலவு..பணத்தை பறிமுதல் செய்ய இயலுமா?இதுதான் முக்கியம் .மற்றவை வீண்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X