பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

Updated : அக் 07, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (8)
Advertisement
நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

கொளத்துாரில், முதுகலை பட்டதாரி இளைஞர், நாட்டு மாட்டு பால் தேநீர் கடை நடத்தி, கிராம மக்களை அசத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம், கொளத்துாரில், மலையடிவார கிராமங்களில் ஒன்றான, நீதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34. இவரது மனைவி பவித்ரா. இரு மகன்கள் உள்ளனர். பிரகாஷ், கொளத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே, நாட்டு மாட்டு பால் தேநீர் கடை நடத்துகிறார்.

அவர் கூறியதாவது: எம்.எஸ்சி., உயிர் வேதியியல் படித்து, ஈரோட்டில், சில ஆண்டு கள், விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தேன். அப்போது, ஆரோக்கிய உணவு உண்ணாததால், மக்கள் நோயால் பாதிக்கப்படுவது தெரிந்தது. அந்த உணவு, வீட்டிலோ, கடையிலோ கிடைக்காததும் காரணம். சமீபகாலமாக, மக்கள், தங்கள் உடல்நலனை காக்க, நாட்டு மாட்டு பால், நாட்டு சர்க்கரையை, உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.

எங்கள் வீட்டில், ஆலம்பாடி நாட்டு மாடுகள் உட்பட, 10 மாடுகளை வளர்க்கிறோம். அதை, பெற்றோர் கவனிக்கின்றனர். வேலையை விட்டு, மக்களுக்கு ஆரோக்கிய உணவை தயாரித்து வழங்க, உணவகம் தொடங்க முடிவு செய்தேன். ஒரு மாதத்துக்கு முன், கொளத்துார் நாட்டு மாட்டு பால் தேநீர் கடை வைத்தேன். ஒரு கோப்பை, 10 ரூபாய்க்கு வழங்குகிறேன். நானும், மனைவியும், கடையை பார்த்துக் கொள்கிறோம்.

நாட்டு மாடு, பால் குறைவாக கறக்கும் என்பதால், விற்பனை அதிகரித்தால், சில விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளேன். மாலை, கேழ்வரகு களி செய்து விற்கிறோம். விரைவில், காலையில் அருகம்புல் உட்பட பல்வேறு மூலிகைச்சாறு தயாரித்து விற்க முடிவு செய்துள்ளேன். சமீபகாலமாக, இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறி, அரிசி, செக்கில் ஆட்டும் எண்ணெய் பக்கம், மக்கள் திரும்பியுள்ளதால், என் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-அக்-201912:41:05 IST Report Abuse
Lion Drsekar இன்றைக்கு எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் தாங்களாக முன்வந்து திறமைகளை மற்றும் முயற்சிகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற தாயைப்போல ஜாதி, மத வேறுபாடு இன்றி யார் யார் எங்கெல்லாம் இருக்கிரீர்களோ அங்கெல்லாம் வலிய சென்று தினமலரில் பிரசுரிப்பது மிகவும் பாராட்டுக்குரியது, மன்னிக்கவும் பல இடங்களில் ஆங்கிலத்தில் கவர் என்கிறார்கள் அது கொடுத்தால் மட்டுமே கொடுக்கும் கவருக்கு ஏற்ப செய்திகள் என்றாகிய நிலையில் எதையுமே எதிர்பார்க்காமல் உள்ளது உள்ளபடி தனித்திறமைகளை வெளிபப்டுத்தி ஊக்குவிப்பதில் தினமலர் மட்டுமே என்றால் அது மிகையாகாது, வாழ்க உங்கள் கொற்றம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
12-அக்-201911:43:33 IST Report Abuse
ரத்தினம் வாழ்க. வளர்க, பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-அக்-201914:41:07 IST Report Abuse
இந்தியன் kumar அசைவம் தவிர்த்து வாழ்வில் அமோகமாக இருங்கள். உயிர்க்கொலை செய்வது மாபெரும் பாவம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X