எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அதிவேக ரயில், 'வந்தே பாரத்' தயாரிப்பு: சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு அனுமதி கிடைக்குமா?

Updated : அக் 08, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
அதிவேக ரயில், வந்தே பாரத், தயாரிப்பு,  சென்னை ஐ.சி.எப்., ஆலை, அனுமதி கிடைக்குமா

சென்னை, ஐ.சி.எப்., தொழிற்சாலையில், அதிவேக, 'ரயில் - 18' திட்டத்தில், 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொடருமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையில், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், 'ரயில் - 18' திட்டத்தின் கீழ், அதிநவீன தொழில்நுட்பத்தில், 160 கி.மீ., வேகத்தில் இயங்கக் கூடிய, ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், 80 சதவீதம் உள்நாட்டு மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ரயிலுக்கான, 16 பெட்டிகள் தயாரிக்க, 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.ஐ.சி.எப்.,பில், 'ரயில் - 18' திட்டத்தில், 10 ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க, ரயில்வே வாரியத்தால், 2018ல், 'ஆர்டர்' வழங்கப்பட்டது.


ஒப்புதல்

அதில், முதல் ரயிலுக்கான, 16 பெட்டிகள், அதே ஆண்டு அக்டோபரில், வாரியத்திடம் வழங்கி, 'வந்தே பாரத்' என, பெயரிடப்பட்டு, டில்லி - உ.பி., மாநிலம், வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகின்றன.இரண்டாவது ரயிலுக்கான, 16 பெட்டிகள், நடப்பாண்டு மே மாதம் ஒப்படைக்கப்பட்டன. இந்த ரயில், டில்லி - ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கட்ரா இடையில், தன் பயணத்தை, சில தினங்களுக்கு முன் துவக்கியது.

ஏற்கனவே, 10 ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க, ரயில்வே வாரியம் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவற்றை தயாரித்து வழங்க, முறைப்படி ஒப்புதல் தர வேண்டும். அதன்படி, இரு ரயில்களுக்கான பெட்டிகளை பெற்ற வாரியம், எஞ்சிய, எட்டு ரயில்களுக்கான பெட்டிகளை தயாரித்து வழங்க, ஐ.சி.எப்.,புக்கு, ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.அதனால், இனிமேல், அதே வகை நவீன பெட்டிகளை, வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளதா என, ஐ.சி.எப்., தொழிலாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.


200 கோடி ரூபாய்

இதுதொடர்பாக, வந்தே பாரத் வகை ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிலை குறித்து, ஐ.சி.எப்., பொதுமேலாளர், பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார்; மற்ற அதிகாரிகளும் வாய் திறக்க மறுக்கின்றனர். இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:வந்தே பாரத் ரயில் பெட்டிகள், ஐ.சி.எப்.,பில், 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதே வகை பெட்டிகளை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால், 200 கோடி ரூபாய் செலவாகும். வந்தே பாரத் ரயிலை, 160 கி.மீ., வேகத்தில் இயக்கலாம் என்றாலும், சோதனை ஓட்டத்தில், 180 கி.மீ., வேகம் வரை, வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.டில்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் ரயில், பயண நேரத்தில் தாமதம் ஏற்படுத்திய தில்லை. உலக அரங்கில், இந்தியா தயாரிப்பு ரயில் பெட்டிகள் குறித்து, பல நாடுகள் பாராட்டி உள்ளன.


தனியாருக்கு அனும

திதற்போது, பகல் நேர ரயிலாக இயக்கப்படும், அந்த ரயிலில் இருக்கை வசதி மட்டும் உள்ளது. இரவு நேரத்தில், இயக்க ஏதுவாக, படுக்கை வசதி பெட்டிகள் தயாரிக்க, ஐ.சி.எப்., ஊழியர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.மீதி, எட்டு ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு குறித்து, நான்கு மாதங்களாக, வாரியத்திடம் இருந்து, எந்த பதிலும் இல்லை.வரும், 2021ல் புதிதாக, 50 வழித்தடங்களில் ரயில்களை இயக்க, தனியாருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.அதில், தங்களுக்கு விருப்பமான ரயில் பெட்டிகளை வாங்கவும், தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க, இந்தியாவில், மற்ற ரயில் பெட்டி தொழிற்சாலையில் கட்டமைப்பு வசதி இல்லை.

அப்படி இருந்தும், அவற்றை தயாரிக்க, ஐ.சி.எப்.,புக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கு மூடுவிழா நடத்தி விடுவரோ என, சந்தேகம் எழுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ஆர்வம்

'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரிப்பை முடக்காமல் இருக்க வலியுறுத்தி, ஐ.சி.எப்., முன்னாள் பொது மேலாளர் மணி, 'டுவிட்டர்' பதிவு:'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரிப்பு திட்டத்தில், இரண்டாவது ரயிலுக்கான பெட்டிகள், பிப்ரவரியில், ரெடியாகி விடும் என்றனர்; மே மாதம் தான் வழங்கப்பட்டன. மூன்றாவது ரயிலுக்கான பெட்டிகள் எப்போது தயாராகும்; பயணியர் சேவையில் சேர்க்கப்படும் என, சொல்ல முடியுமா?

மூன்றாவது ரயில், சென்னை - ஐதராபாத், சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
08-அக்-201914:49:10 IST Report Abuse
PANDA PANDI கிடைக்காது. உள்குத்து வேலை ஜோராக நடந்துகொண்டு இருக்கிறது. APP ரெடி.
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-அக்-201912:00:57 IST Report Abuse
Ramki பொது மக்களிடம் இவ்வகையான வண்டிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது என்பதனை கண்டுகொள்ள சில காலம் அவகாசம் தேவைப்படலாம்.அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த இடைவெளி இருக்குமோ என்று தோன்றுகிறது.இத்திட்டம் நல்லதொரு வரவேற்பினை பெற்றால் முழு வீச்சில் உற்பத்தி தொடங்க சாத்தியக்கூறுகள் இருக்கலாம்.அப்படி ஒரு தேவை நேரிடவிருந்தால் ICF மட்டுமல்லாது வேறு பல நிறுவனங்களும் இவ்வுற்பத்தியில் இணைந்தால் இதுபோன்ற வண்டிகள் நாடு முழுதும் உலாவரும் என்பது திண்ணம்.ஏற்றுமதியும் கருத்தில் கொண்டால் மேலும் பல ICF போன்ற தொழிற்கூடங்கள் தனியார் மூலமோ அல்லது அரசு வழியிலோ நாட்டில் அமையவேண்டியது எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டிட வழி வகுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X