காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் கூட்டாக திட்டம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
காஷ்மீர், தாக்குதல்,பயங்கரவாதிகள், திட்டம்

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் உட்பட நாட்டின் பல இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தவும் அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை படுகொலை செய்யவும் பாக். ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இணைந்து திட்டமிட்டுள்ளது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் இந்தியா - பாக். இடையே பதற்றம் நிலவி வருகிறது. டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து டில்லி மற்றும் வட மாநிலங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் உட்பட நாட்டின் பல இடங்களில் பயங்கர தாக்குதல்கள் நடத்தவும் அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை படுகொலை செய்யவும் பாக். ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சமீபத்தில் ரகசிய கூட்டம் நடத்தினர். இதில் லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் - இ -முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது ஜம்மு - காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தவும் அரசியல் தலைவர்கள் போலீஸ் அதிகாரிகளை படுகொலை செய்யவும் திட்டமிடப்பட்டது. மேலும் இந்த நாச வேலைகளை எப்படி செய்து முடிக்க வேண்டும் என மேலிடம் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் அவர்களுக்கு விளக்கப்பட்டன.

ஜம்மு - காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல்கள் நடத்தும் பணி ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பிடமும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் பணி லஷ்கர் அமைப்பிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் பதற்றத்தை அதிகரிக்க செய்யவும் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கொல்லும் பணி ஹிஸ்புல் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
08-அக்-201907:35:11 IST Report Abuse
வல்வில் ஓரி இவர்கள் நம் நாடு பூராம் பெருகினால் 'WE WANT TO PLEASE OUR GOD ' தத்துவத்தினை நாடு பூராம் அமல் படுத்துவார்கள்..
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-அக்-201906:42:43 IST Report Abuse
mindum vasantham இனி காஷ்மீர் என்று மட்டும் கூறுங்கள் ,ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்டது பள்ளத்தாக்கு பகுதியில் தான் பாக்கிஸ்தான் வாலாட்டுகிறது
Rate this:
Cancel
08-அக்-201906:23:39 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இவர்களையும், இவர்கள் ஆதரவாளர்களையும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கொன்று குவிக்கும் பணி இந்திய ராணுவத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
08-அக்-201908:58:31 IST Report Abuse
Darmavanராணுவத்தின் செயல்பாடுகளில் கோர்ட் தலையிடாமல் இருக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X