அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் களைகட்டும் பிரசாரம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
dmk,admk,திமுக,அதிமுக,நாங்குநேரி, விக்கிரவாண்டி,களைகட்டும்,பிரசாரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்ட துவங்கி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மற்றும் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


கூட்டணி


விக்கிரவாண்டியில் மட்டுமே, தி.மு.க., போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியை, கூட்டணி கட்சியான காங்கிரசிடம் ஒப்படைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த இடைத்தேர்தல் கருதப்படுகிறது. எனவே, இரண்டு கூட்டணிகளிலும் வெற்றிக்காக, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

தி.மு.க., தரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவில், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அ.தி.மு.க., தேர்தல் பணிக் குழுவில், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர். நாங்குநேரி தொகுதியில், 23 வேட்பாளர்களும், விக்கிரவாண்டி தொகுதியில், 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, பிரசார பணிகளை, இரு தரப்பினரும் கவனிக்க துவங்கி உள்ளனர். தலைவர்களின் தேர்தல் பிரசார தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.


அறிவிப்பு


தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியில், நாளை பிரசாரத்தை துவங்குகிறார். இரண்டு நாட்கள், அவர் முதற்கட்ட பிரசாரம் செய்யவுள்ளார். அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரான, முதல்வர் இ.பி.எஸ்., வரும், 12ல், விக்கிரவாண்டியில் பிரசாரம் துவங்குகிறார். இரண்டு தொகுதிகளிலும், ஆறு நாட்கள் அவர் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், வரும், 13ல், விக்கிரவாண்டியில் பிரசாரத்தை துவங்குகிறார்; அவரும், ஆறு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட, இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க.,வினரும் வியூகம் அமைத்து வருவதால், இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


தி.மு.க., பணம் தருமா?

நாங்குநேரி சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குமரி அனந்தன் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்டுமான தொழில் அதிபர் ரூபி மனோகரனை, காங்., வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு இணையாக, ரூபி மனோகரனும், தேர்தல் செலவுக்கு பணத்தை வாரி இறைப்பார் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்பார்த்தனர்.

லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., சார்பில், கூட்டணி கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. அதேபோல, தனக்கும், தி.மு.க., தேர்தல் நிதி வழங்கும் என, ரூபி மனோகரன் எதிர்பார்க்கிறார். அதனால், தேர்தல் செலவில், அவர் சிக்கனம் கடைப்பிடித்து வருகிறார். இது, தி.மு.க., கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-அக்-201913:09:46 IST Report Abuse
Bhaskaran காங்கிரஸ் தோற்றால் திமுகவிடம் பேரம் பேசமுடியாது எனவே காங்கிரஸ் தோற்பதையே திமுக விரும்பும்
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
08-அக்-201906:02:33 IST Report Abuse
s.maria alphonse pandian நான்குனேரியில் காங்கிரஸ் தோற்கவேண்டும் என்பதே திமுகவின் திட்டமாக இருக்கும்...நாங்குனேரியில் தான் போட்டியிட வேண்டும் என்னும் தனது விருப்பத்தை திமுக உதயநிதி ஸ்டாலின் மூலமாக வெளிப்படுத்தியும் காங்கிரஸ் வீம்பாக தானே போட்டியிடவேண்டும் என சொல்லி போட்டியிடுகிறது...எனவே அங்குள்ள திமுகவினரை அதிமுக எளிதாக வளைத்துப்போட்டு வெற்றி பெற்றுவிடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X