பொது செய்தி

இந்தியா

புதிய மோட்டார் வாகன சட்டம்; 5 மாநிலங்களில் மட்டுமே அமல்

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (6)
Advertisement
குஜராத், உத்தரகண்ட், கேரளா, கர்நாடகா,அசாம்,மோட்டார் வாகன சட்டம்,5 மாநிலங்கள்,அமல்

புதுடில்லி : கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை, இதுவரை, ஐந்து மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தி உள்ளன.

சாலை விபத்துகளை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, குற்றங்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம், கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது.


ஆலோசனை:


ஆனால், குஜராத், உத்தரகண்ட், கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டுமே இதுவரை, இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. பல மாநிலங்கள், அபராதக் கட்டணங்களை குறைப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், திருத்தப்பட்ட கட்டணங்கள் குறித்தோ, எப்போது புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வரும் என்றோ, இதுவரை அவை அறிவிக்கவில்லை.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், அபராதத் தொகையை நிர்ணயித்துக் கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அறிவிப்பு வெளியிட, அவற்றை வலியுறுத்துவது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகின்றது.

இது குறித்து, சாலை போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே சீரான அபராதம் இருக்கும் வகையில்தான், புதிய மோட்டார் வாகனச் சட்டம் கொண்டு வரப்பட்டது.


மெத்தனம்:


அதிக அபராதம் விதித்தால்தான், குற்றங்கள் குறையும். குஜராத்தில், கட்டணங்கள் குறைக்கப்பட்டன. ஆனால், அங்கு குற்றங்கள் குறையவில்லை. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து, ஒரு மாதத்துக்கு மேலாகியும், பெரும்பாலான மாநிலங்கள் அதை செயல்படுத்தாமல் மெத்தனமாக உள்ளன. இந்த சட்டத்தை செயல்படுத்தாவிட்டால், சாலை விதிமீறல் களை கட்டுப்படுத்தவோ, மக்களிடையே ஒழுங்கு முறை ஏற்படுத்தவோ முடியாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ஐ.பி.சி., சட்டமும் பாயும்:


மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, சஞ்சீவ் கன்னா அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மோட்டார் வாகனச் சட்டம் என்பது, சாலை விதிகள் தொடர்பானவை; மோட்டார் வாகனங்கள் தொடர்பானவை. தற்போது மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

அதனால், அதிவேகமாக ஓட்டுவது, அச்சுறுத்தும் வகையில் ஓட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அவர்கள் மீது, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
08-அக்-201917:40:17 IST Report Abuse
K. V. Ramani Rockfort வேடிக்கை பார்க்கும் நிலையில் அரசு இருப்பதால்தான் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. போக்குவரத்து காவல்துறையினரின் வருவாயும் குறையுமே, அதுவும் ஒரு காரணமா ?.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
08-அக்-201914:55:59 IST Report Abuse
siriyaar laws must be common for india, only implementation power for states this is against principle of uniform civil code
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
08-அக்-201913:00:49 IST Report Abuse
Asagh busagh இந்தியா போல வருமான்னு வெளி உலகை பார்க்காத பலர் முட்டு கொடுத்தாலும், இது போன்ற செய்திகள் நம் நாடு செல்ல வேண்டிய திசையை கூட அறியவில்லை என்பதை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X