பொது செய்தி

இந்தியா

சுவிஸ் வங்கி கணக்கு வைத்துள்ளோர் விபரம் பகிர்வது துவங்கியது! 'கிலி'யில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (39+ 39)
Advertisement
சுவிஸ், வங்கி கணக்கு ,துவங்கியது,  கறுப்புப் பணம், பதுக்கல், வருமான வரி

புதுடில்லி: ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அந்த நாட்டில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்கள், முதல் முறையாக அதிகாரப் பூர்வமாக முழுமையாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதனால், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், 'கிலி'யில் உள்ளனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், முதலீடுகள் செய்யும் போது, அந்த தொகை எங்கிருந்து வந்தது, அதற்கு வருமான வரி செலுத்தப்பட்டதா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாது. அதனால், சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்த பண முதலைகள் பணத்தை முதலீடு செய்து வந்தனர். இதனால், சுவிட்சர்லாந்து, கறுப்புப் பண பதுக்கலுக்கான சொர்க்கம் என, அழைக்கப்பட்டு வந்தது.


ஒப்பந்தம்:


இந்த நிலையில், கறுப்புப் பண பதுக்கலை தடுக்கும் வகையில், சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதலீடுகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை உருவாக்கப்பட்டது. இதில், சுவிட்சர்லாந்தும் இணைந்தது. பல்வேறு நாடுகளுடன், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு, சுவிட்சர்லாந்து அரசு ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.


தகவல்:


இந்தக் கறுப்புப் பணத்தை மீட்டெடுக்க, 2014ல், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டது.அதன்படி, சுவிட்சர்லாந்து அரசுடன், தகவல்கள் பரிமாறி கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு குறிப்பிட்ட ஆண்டில், தங்களுடைய நாட்டில் செய்யப்பட்டு உள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை, சுவிட்சர்லாந்து அரசு அளிக்கும். அதன்படி, 2018ம் ஆண்டில், சுவிஸ் வங்கி களில், இந்தியர்களின் பெயர்களில் உள்ள கணக்குகள், முதலீடுகள் உள்ளிட்ட தகவல்களை, சுவிஸ் அரசு அளித்துள்ளது.

இனி ஒவ்வொரு ஆண்டும், செப்., மாதத்தில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது அளித்துள்ள தகவல் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், இந்த தகவல்களில் கூறப்பட்டுள்ள பெயர்களின் அடிப்படையில், மத்திய அரசு விசாரணை நடத்த துவங்கி விட்டது. கடந்த ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் இருந்த கணக்குகள் மற்றும் முடிக்கப்பட்ட கணக்குகள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன.

கறுப்புப் பண விவகாரத்தில், பிரதமர் மோடி அரசு தீவிரமாக உள்ளதால், 'தங்கள் மீது நடவடிக்கை பாயும்' என, பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கிலியில் உள்ளனர். மிக விரைவில், கறுப்புப் பணம் பதுக்கியோர் மீதான நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியா உட்பட, 85 நாடுகளுடன், தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக, சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தோண்டி எடுக்க முடிவு:


ஒப்பந்தத்தின்படி, 2018ம் ஆண்டில் இருந்து, தகவல்களை பரிமாறிக் கொள்ள, சுவிஸ் அரசு முன்வந்துள்ளது. அதே நேரத்தில், அதற்கு முன்பு, அங்குள்ள வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், யார் யார் முதலீடு செய்துள்ளனர் போன்ற தகவல்களை அளிக்கும்படி, சுவிஸ் அரசுக்கு, மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. அந்தத் தகவல்களை பெறுவதற்கான, அனைத்து முயற்சிகளிலும், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சுவிஸ் அரசு தற்போது அளித்துள்ள பட்டியலில், முதலீடு செய்துள்ளோரின் பெயர், முகவரி, அவருடைய வங்கி கணக்கு எண், முதலீட்டு விபரம் என, முழு ஜாதகமும் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக, இதுபோன்று, முழு தகவல்கள் கிடைத்துள்ளதால், மத்திய அரசு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. அனைத்து விபரங்களையும் தோண்டி எடுத்து, தீவிர விசாரணை செய்வதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (39+ 39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-அக்-201922:26:09 IST Report Abuse
Milirvan 2018 லிருந்தா? அப்போ அதுக்கு முன்பு பதுக்கியவனெல்லாம் பாக்கியவான்களா..? ஸ்தோத்திரம்,,
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
08-அக்-201920:38:49 IST Report Abuse
Girija இந்த உதரெல்லாம் வேண்டாம் , ஐ ஆர் டி சி ரிஸர்வேஷஷன் லிஸ்ட் மாதிரி ஆர் ஏ சி, ஈ கியூ, வெயிட்டிங் லிஸ்ட் என்று பிராடு வேலைகள் நடக்கும். அது போன லிஸ்ட் இது புது லிஸ்ட் என்றும் சொல்வர். எங்களுக்கு அங்கு கணக்கு இப்போது இல்லை நஹி என்பர். லிஸ்ட் வந்தா உடனே வெளியிடவேண்டியது தானே?
Rate this:
Share this comment
rajan - erode,இந்தியா
08-அக்-201923:36:31 IST Report Abuse
rajanஅந்த லிஸ்டில் பிஜேபி யாரும் இல்லை என்று மோடி சொல்வார் முழு விவரத்தையும் வெளியிட தைரியம் இல்லாத பிரதமர்...
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-அக்-201915:35:44 IST Report Abuse
Milirvan ஒரு நாடு/தனிமனிதன்/அமைப்பு அபின், கஞ்சா போன்றவற்றை உற்பத்தி செய்து விற்று பணம் சம்பாதித்தால் அந்த நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவார்கள்.. உலக நாடுகளை/மக்களை சீரழித்து சம்பாதிக்ககூடாதென்பார்கள்.. அப்படிப்பட்ட பணம் வங்கியில் இருப்பதாக கண்டறியப்பட்டால் அதனை பறிமுதல் செய்வார்கள், முடக்குவார்கள்.. ஆனால், லஞ்ச லாவண்ய தரகு பணம் மூலமாக பல ஏழை நாடுகளை ஓட்டாண்டி ஆக்கியவர்கள், அந்த பணத்தை இந்த வெள்ளைக்கார நாட்டில் பதுக்கினால் மட்டும்,இது எங்கள் நாட்டு சட்டத்திட்டம், வங்கி நடை முறை என்பார்கள்.. சட்ட பூர்வமானது என்பார்கள்.. கறை படிந்த பணத்தை பாதுகாப்பது சட்ட பூர்வம் என்று கூறி, ஏழை நாடுகளின் சுரண்டிய இதுபோன்ற பணத்தை இந்த வெள்ளைக்கார நாட்டில் செறிய வைத்து, தம் பொருளாதாரத்தை மட்டும் வளர்த்து நாங்கள் வளர்ந்த நாடு என்று பம்மாத்து காட்டுவார்கள்.. ஒரு அரசாங்கமே கோரிக்கை வைத்தாலும், எங்கள் வாடிக்கையாளர்கள்/திருடர்களை பற்றி தகவல் கொடுக்கமாட்டோம் என்பார்கள்.. ஆனால் இந்த ஐரோப்பிய தேசங்கள், போதை மருந்து, கள்ள ஆயுத சந்தை போன்றவற்றில் உண்டாக்கிய பணம் வங்கியில் இருப்பதை அறிந்தால் மட்டும் ஐயோ, அய்யய்யோ என்று கூப்பாடு போடுவார்கள், இந்த மொள்ளமாரித்தனத்தையே சட்ட பூர்வமாக செய்யும் ஸ்விட்ஸர்லாந்துகாரனை ஏதோ தேவனை பார்ப்பது போல பார்ப்பார்கள்.. வளரும்நாடுகளின் குருதியை குடிக்க சட்டபூர்வ அமைப்பு ஏற்படுத்தாதிருந்தால், எவனும் இங்கே பணம் பதுக்கமாட்டான்.. இந்த வெள்ளைக்கார நாடும் உழைத்து பிழைக்க வேண்டியதாகிவிடும். கள்ள சந்தை ஆயுதம்/போதை பொருள் விற்பனை மூலம் பணம் செய்வது தவறு என்றால், அதே போன்ற பணத்தை பதுக்க உதவி, அதன் மூலம் வயிறு புடைக்கும் இவர்களும் அருவருக்கத்தக்கவர்கள்தாம்.. இவர்களுக்கு அபின் உற்பத்தி செய்யும் ஏழை ஆப்கானியர்கள் மேல் என்றே கூறுவேன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X