பொது செய்தி

இந்தியா

பிரான்சுடனான உறவு மேலும் பலமாகும்: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் நம்பிக்கை

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: ''ரபேல் ரக விமானங்கள் கொள்முதல் விஷயத்தை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டுடனான நம் உறவு, மேலும் பலமாகும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.






இந்திய விமானப் படைக்கு, ரபேல் ரக விமானங்களை வாங்க, ஐரோப்பிய நாடான, பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த பணிகள், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


பலமாகும்:


பிரான்ஸ் தலைநகர் பாரிசில், இன்று நடக்கும் நிகழ்ச்சியில், ரபேல் ரக போர் விமானம், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை பெறுவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரிஸ் சென்று உள்ளார். இதற்காக, டில்லி விமான நிலையத்தில் இருந்து, நேற்று(அக்.,7) அவர் புறப்பட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ரபேல் ரக விமானங்கள், நம் விமானப் படையில் சேர்க்கப்படுவதால், விமானப் படை மேலும் பலமாகும். அதேபோல், பிரான்சுடனான உறவும், மேலும் பலமாகும்,'' என்றார். தன் பிரான்ஸ் பயணத்தின்போது, அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோனையும், ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுகிறார். மேலும், ரபேல் விமானத்திலும் பயணிக்கிறார்.






'சாஸ்த்ர பூஜா'


நம் நாட்டில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரபேல் விமானத்தில், 'சாஸ்த்ர பூஜா' எனப்படும், ஆயுத பூஜை நடத்தவும், ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளதாக, இந்திய விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
08-அக்-201904:19:25 IST Report Abuse
blocked user சீக்கிரம் பாக்கிகளிடம் இதை சோதித்துப்பார்க்க வாய்ப்பு வரும்...
Rate this:
Share this comment
Raj - coimbatore,இந்தியா
08-அக்-201907:53:33 IST Report Abuse
Rajஇதெல்லாம் உபயோகப்படாம இருக்கும் வரை நாடு உருப்படும். இது வெறும் இன்சூரன்ஸ் பாலிசி போல தான்....
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
08-அக்-201903:03:59 IST Report Abuse
Anandan இது பாவாடை நாடாயிற்றே, இதனுடன் என்ன உறவு? பிஜேபி ஆதரவாளர்கள் நொந்து போயிடமாட்டாங்களா? சுரணை இருக்கானு பார்ப்போம்.
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
08-அக்-201910:48:45 IST Report Abuse
Anandஉங்களைப்போலவே பிஜேபி ஆதரவாளர்கள் நினைத்தால் எவனும் இங்கு வாழ முடியாது.......
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
08-அக்-201921:07:26 IST Report Abuse
N.Kபிரான்ஸ் ஒரு மதசார்பற்ற நாடு. ஆகவே தேவைப்பட்டால் நோட்ரேடம் கதீட்ரல் முன்னாடி பகவத் கீதை விற்கலாம். போற வர்ற பிரெஞ்சுக்காரர்களை இந்துமதத்திற்கு மாற்றலாம். மதசார்பற்ற நாடாயிற்றே. ஆனால் அதெல்லாம் நாங்கள் செய்யமாட்டோம். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் மட்டுமே அதெல்லாம் நடக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
08-அக்-201901:55:15 IST Report Abuse
Arasu அது தான் ...500 .கோடிக்கு 1000 கோடியா அள்ளி குடுத்தீங்க அப்புறம் வலு படாம என்ன .
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
08-அக்-201904:20:16 IST Report Abuse
blocked userஅறிவற்றவர்களை விட அறிவுள்ளவர்கள் போல நடிப்பவர்களால்தான் ஆபத்து அதிகம்.....
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
08-அக்-201910:50:34 IST Report Abuse
Anandஅரசு என்கிற பெயரில் ஒரு சுடலை கைத்தடி ... கூறுகெட்டத்தனமா உளறிக்கிட்டு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X