இம்ரான்கானுக்கு சவுதி இளவரசர் மூக்குடைப்பு

Updated : அக் 07, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (54)
Advertisement

இஸ்லாமாபாத்: அமெரிக்கா செல்வதற்கு, பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு அளித்த விமானத்தை, வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், அதை பாதியிலேயே திரும்பப் பெற்றார்.






அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இதில், நம் அண்டை நாடான பாக்., பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். அமெரிக்காவுக்கு முன், அவர் வளைகுடா நாடான சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து வர்த்தக விமானத்தில், சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்போது, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தன் விமானத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

அதன்படி, பட்டத்து இளவரசரின் சிறப்பு விமானத்தில் இம்ரான் கான், நியூயார்க் சென்றார். அங்கிருந்து பாக்., திரும்புவதற்கு அவர் தயாராக இருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதனால், வர்த்தக விமானத்தில், இம்ரான் நாடு திரும்பினார். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏதும் ஏற்படவில்லை. இம்ரான் மீதான அதிருப்தியாலேயே, பட்டத்து இளவரசர், விமானத்தை திரும்பப் பெற்றதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.





இது குறித்து, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், 'பிரைடே வீக்லி' என்ற ஆங்கில நாளிதழில் வெளியாகி உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: நியூயார்க் நகரில் நடந்த கூட்டங்களின் போது, துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டாகன் மற்றும் மலேஷிய பிரதமர் மகாதீர் முகமது ஆகியோருடன் இணைந்து, 'இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு' உருவாக்கப்படும் என, இம்ரான் அறிவித்தார்.

இதைத் தவிர, அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்னையில், ஈரானுடன் பேச்சு நடத்த, இம்ரான் முயற்சித்தார். ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பிரச்னைகள் தீவிரமாக இருக்கும் நிலையில், இம்ரானின் இந்த நடவடிக்கைகள், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. அதனால், இம்ரானின் மூக்கை உடைக்கும் வகையில், சல்மான் விமானத்தை திரும்பப் பெற்றுள்ளார். இவ்வாறு, செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
08-அக்-201919:56:03 IST Report Abuse
I love Bharatham ரஹீம் பாய் கொஞ்சம் குழம்பி இருக்கிறீர்கள் ....சூட ஒரு டீயை குடிச்சு எழுதுங்க .....நீங்களும் ...கத்தி முனையில் மதம் மற்ற பற்ற நீங்கள் தேவை இல்லாமல் கூவதிர்கள்..... ....எங்கள் மதச்சார்பினை ...உங்களை வாழ வைக்கிறது ....சவுடியும் ,பாகிஸ்தானும் ...அல்ல ...
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
08-அக்-201914:07:23 IST Report Abuse
ashak எல்லாம் பணம்
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
08-அக்-201913:04:17 IST Report Abuse
elakkumanan இங்க ஒரு பயங்கர சண்டை நடக்குது....யாரு ஒரிஜினல் அப்படின்னு.... கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. நமக்கு தெரிஞ்ச, புரிஞ்சு, முடிஞ்சா விசயத்துல சண்டை போடுங்க. ஒரு நானூறு வருசத்துக்கு முன்னாள், இஸ்லாமிய மதமே இங்கு இல்லை. இதெல்லாம் தேவையே இல்லை. இம்ரான் அந்து போயி, தொங்கிகிட்டு இருக்கார். எவ்வளவு தொங்குறாரு, எவ்வளவு அந்து போயிருக்கு என்பது இன்னும் ரெண்டு மூணு மாசத்தில் தெரியும். எப்பிடியும், இம்ரான் ஓடிப்போய்டுவார் அல்லது வரலாற்றில் இடம் பிடிச்சுடுவார். இதுதானே அந்த புண்ணிய பூமியின் வரலாறு. விடுங்க பாசு.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X