பொது செய்தி

தமிழ்நாடு

5,000 கழிப்பறைகள் கட்டித்தந்து தேசிய விருது பெற்ற பெண்

Updated : அக் 08, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
கழிப்பறை,தேசிய விருது,   பெண்

மதுரை : 'துாய்மை இந்தியா' திட்டத்தில், மதுரை ஊராட்சிகளில், தனி ஒருவராக களம் இறங்கி, 5,000க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டித் தந்த, செல்விக்கு, மத்திய அரசு, தேசிய விருது அளித்து கவுரவித்துள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிவர், செல்வி, 36. துாய்மை இந்தியா திட்டத்திற்கு முன், 'நிர்மல் பாரத்' திட்டத்தில், சமூகப்பணிகள் செய்தார்.கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின், துாய்மை இந்தியா திட்டத்தில் சேவைபுரிய, ஊராட்சிகளை நோக்கி பயணித்தார். இவர் வசித்த சக்கிமங்கலத்தை, மாதிரி ஊராட்சியாக்கி, மக்கள் மனதில் இடம் பிடித்தார்.செல்வி கூறியதாவது:பிளஸ் 1 படித்த நான், சிறு வயதிலேயே, சமூக சேவையில் ஈடுபட்டதால், இத்திட்டத்தில் பணிபுரிய ஆர்வம் வந்தது.

சக்கிமங்கலத்தில், திறந்தவெளி கழிப்பறைகளால் பெண்கள், மாணவியர் துன்பம் அனுபவித்தனர். இந்நிலையை மாற்ற, 'வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுங்கள்; அரசு, 12 ஆயிரம் ரூபாய் மானியம் தரும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.முதலில் தயங்கிய கிராமத்தினர், கழிப்பறையின் அவசியம் உணர்ந்து, அதை கட்டினர். பின் மரக்கன்று நடுதல், மக்கும் குப்பையில் மண்புழு உரம் தயாரிப்பு என, முன்மாதிரி ஊராட்சியாக மாற்றினேன். மதுரை மாவட்டம் நரசிங்கம், அயிலாங்குடி, திருவாதவூர் உள்ளிட்ட ஊராட்சிகளில், நேரடி சேவை செய்தேன்.

பிற ஊராட்சிகளில் உள்ள சமூக சேவகர்களுக்கு, பயிற்சி அளித்து, அங்கும் கழிப்பறைகள் கட்ட வைத்தேன்.இத்திட்டத்திற்காக, தமிழகத்தில் இருந்து, தேசிய விருது பெற்ற, ஒரே பெண் நான் தான். இதற்கு ஊக்கம் அளித்த, அப்போதைய கலெக்டர் சுப்பிரமணியன், கூடுதல் கலெக்டராக இருந்த ரோகிணி உள்ளிட்ட அதிகாரிகளை மறக்க முடியாது. என் சேவை பணிக்கு கணவர், இரு மகன்கள், மகள் துணையாக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரை வாழ்த்த, 96889 02163 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-201905:04:08 IST Report Abuse
meenakshisundaram வைகோ ,சீமான் ,வீரமணி ,சுப வீ ,வைரமுத்து -கவனத்துக்கு வரட்டும் ,தமிழகத்தை நாற வைப்போர் கவனிக்கட்டும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201912:22:30 IST Report Abuse
konanki சாதனை புரிந்த இந்த சகோதரிக்கு விருது கொடுக்க அந்த 49 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்களா?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201912:15:32 IST Report Abuse
konanki தமிழ் நாட்டில் ஊடகங்களும் முக்கியமாக செய்தி சேனல்கள் கட்சிகளும் எவ்வளவு எதிர் மறை வேலை செய்கின்றன என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு. மத்திய அரசாங்கம் தேசிய விருது கொடுத்து இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் எந்த அமைப்பும் இவரை கண்டு கொள்ள வில்லை . வெட்டியாக ஒருதலை பட்சமாக விவாதங்கள் நடத்த தான் தமிழ் channelkal லாயக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X