மோடியின் பயணத்துக்காக ஆயுதம் தாங்கிய விமானம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி : பிரதமர் உட்பட மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக, ஆயுதம் தாங்கிய, இரண்டு சிறப்பு போயிங் 777 விமானங்கள், 1,361 கோடி ரூபாயில் வாங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு, இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், 'ஏர் இந்தியா ஒன்' விமானத்தை பயன்படுத்துகின்றனர். பல்வேறு புதிய அம்சங்களுடன், இரண்டு போயிங் 777 விமானங்கள் வாங்குவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'போயிங்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதிநவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், எதிரி நாட்டு ரேடார்களை செயலிழக்க வைக்கும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்கள் இதில் இடம்பெற உள்ளன. இதைத் தவிர, சுய பாதுகாப்புக்காக, ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வசதியும் இதில் இடம்பெற உள்ளது.

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் விமானத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற உள்ளன. இந்தியாவுடனான சிறப்பான உறவை மதிக்கும் வகையில், அமெரிக்க அதிபரின் விமானத்தில் உள்ள வசதிகளை பார்வையிடுவதற்கு, இந்தாண்டு பிப்ரவரில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. இந்த இரண்டு விமானங்களும், 1,361 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த இரண்டு விமானங்களும் இந்தியாவுக்கு வர உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-அக்-201919:17:30 IST Report Abuse
Niranjan சதாறானே மக்களின் வருமான வரி உச்சவரம்பை உயர்த்த ஆயிரம் முறை யோசிக்கும் மத்திய அரசாங்கம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு விடுத்திய வரியை டிரம்ப் கேட்டார் என்று குறைக்கவும். ஆயிர கணக்கான கோடிகளை விமானதிற்க்காக ஒதுக்கவும் தயங்குவதில்லை. தயவு செய்து நாட்டு மக்களின் நிலையை கணக்கில் கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரத்திற்க்காக செலவாக்க வேண்டாம். அமெரிக்க வளர்ந்த நாடு அமெரிக்க மக்களுக்கு கல்வி மருத்துவம் வேலை இல்லாதவர்களுக்கு ஊக்க தொகை கொடுக்கும் நாடு. நமது நாட்டின் மக்களின் நிலையை தயவு செய்து கணக்கில் எடுக்கவும். ஏழை தாயின் மகன் என்று ஒட்டு வாங்கியவர் இந்த பணத்தை வைத்து மக்களுக்கு எதாவது செய்யலாம்
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
08-அக்-201918:21:48 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இது அடுத்துவரும் பிரதமருக்கு உதவிகரமாக இருக்கும்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-அக்-201904:18:47 IST Report Abuse
 nicolethomsonமுந்தைய அரசில் வாங்கியது என்று ஒதுக்கம இருந்தா சார் , கருநாடகத்தில் சித்தராமையா வாங்கினார் என்று குமாரசாமி புது கார்களை வாங்கினார் அந்த வலி...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
08-அக்-201917:57:55 IST Report Abuse
sankaranarayanan ரெண்டுபக்கமும் யாருக்கும் புரியாமல் இந்தியிலதான் எழுதி இருக்குமா என்ற கேள்வி எதற்கு? இருபது மொழிகளிலும் எழுதி என்ன செய்வது? யாருக்கு புரியும்? எதற்க்காக எந்த வம்பு இப்போது? முதலில் பாதுகாப்பு அவசியம் .அதுதான் முக்கியம். சுடலையை பின்பற்றி சுட்டுக்கொள்ளாதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X