அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஓட்டுக்கு பணம் தர தி.மு.க., திட்டம்!' முதல்வர் குற்றச்சாட்டு

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (28+ 9)
Advertisement
dmk,admk,EPS,முதல்வர், பழனிசாமி,குற்றச்சாட்டு

சென்னை : ''இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு, தி.மு.க., பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, தன் வீட்டிற்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை வந்துள்ளார். அவரை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழிசைக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். தமிழிசையும், சால்வை மற்றும் மரக்கன்றை, முதல்வருக்கு பரிசாக வழங்கினார்.

பின், முதல்வர் அளித்த பேட்டி: தமிழகத்தை சேர்ந்த தமிழிசையை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலில், மக்கள் ஆதரவுடன், அ.தி.மு.க., வெற்றி பெறும். வேலுார் தொகுதி லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வினர் பணம் கொடுத்தனர். வருமான வரித் துறையினர், தி.மு.க.,வினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து, பணம் பறிமுதல் செய்தனர். அதேபோல், தற்போது நடக்கும், இரு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும், தி.மு.க., பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காவிரியில், மேகதாது அணை கட்ட, கர்நாடகாவுக்கு அனுமதி தரக் கூடாது என, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசின் முயற்சியால் தான், அதற்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்த, உள்ளாட்சி மற்றும் சுகாதார துறை சார்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள், காய்ச்சல் வந்ததும், அரசு மருத்துவமனைக்கு சென்று, ரத்த பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-அக்-201900:52:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தாளு கூட்டம் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும், இனிமேல் எந்த தேர்தல் வந்தாலும் தோற்கப் போறது உறுதி, பட்டவர்த்தனம், சர்வ நிச்சயம். அந்த காண்டுலே இந்த காண்டாமிருகங்கள் இப்படி கத்துது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-அக்-201900:49:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உங்க அடிமை கூட்டம் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் ஓட்டு போட அறிவுள்ள எந்த மக்களும் தயாராக இல்லை. அந்த கொடுமையை சொல்லும் பயனி அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
09-அக்-201916:39:43 IST Report Abuse
adithyan விக்கிரவாண்டி பார்முலா,நாங்குநேரி பார்முலா ஆகியவை புதிதாக புகுத்தப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X