ஊடுருவும் மருத்துவ கழிவு... ஊருக்கே அழிவு!

Added : அக் 08, 2019 | |
Advertisement
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜைக்காக சித்ரா வீட்டுக்கு வந்திருந்தாள் மித்ரா. பூஜை முடிந்ததும், பொரி, கடலை, சுண்டல் சகிதம் இருவரும், மொட்டை மாடிக்கு சென்று உட்கார்ந்து, சாப்பிட ஆரம்பித்தனர்.''மீண்டும் படிப்பகத்த திறந்துட்டாங்க. தெரியுமா, மித்து'' என, மகிழ்ச்சியுடன் கூறினாள் சித்ரா.''ஆமாங்க்கா, கேள்விப்பட்டேன்,''''திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழாவில்தான்,
 ஊடுருவும் மருத்துவ கழிவு... ஊருக்கே அழிவு!

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜைக்காக சித்ரா வீட்டுக்கு வந்திருந்தாள் மித்ரா. பூஜை முடிந்ததும், பொரி, கடலை, சுண்டல் சகிதம் இருவரும், மொட்டை மாடிக்கு சென்று உட்கார்ந்து, சாப்பிட ஆரம்பித்தனர்.''மீண்டும் படிப்பகத்த திறந்துட்டாங்க. தெரியுமா, மித்து'' என, மகிழ்ச்சியுடன் கூறினாள் சித்ரா.''ஆமாங்க்கா, கேள்விப்பட்டேன்,''''திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழாவில்தான், அமைச்சர் அறிவிச்சாரு. பேப்பர் செலவுக்கு நிதி ஒதுக்கறதில்லைனு, பூட்டி வச்சு இருந்தாங்க.
நியூஸ் பேப்பர் வாங்கி போடணும்னு, கலெக்டர் ஆர்டர் போட்டுட்டாரு,'' என்றாள் சித்ரா.''கட்சிக்காரங்க, குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தறப்ப, சில நேரங்களில், நினைவு மண்டபத்துக்குள்ளே போயிடறாங்க. இதுக்கும் கலெக்டர் ஒரு 'குட்டு' வைச்சா பரவாயில்ல,'' என்றாள் மித்ரா.''மித்து, கார்ப்ரேஷன் அதிகாரி முகத்தில் 'ஈ' ஆடலையாமா?''''அப்படிங்களா.... கொஞ்சம் விரிவாகத்தான் சொல்லுங்க''''வெள்ளியங்காடு பக்கத்துல ஆக்கிரமிப்பு அகற்றுவது சம்பந்தமா, கார்ப்ரேஷன்ல புகார் சொல்ல போயிருக்காங்க. அங்கிருந்த அதிகாரியோ, 'எனக்கு வேலை இருக்கு நீங்க போங்க'னு விரட்டினாராம். டென்ஷன் ஆன மக்கள், 'எங்களுக்கும்தான் வேலையிருக்கு. சும்மா, உங்ககிட்ட நலம் விசாரிக்க வந்தோமா?''''இந்த வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம். உங்க பேச்சை பழைய பஸ் ஸ்டாண்ட் டாய்லெட் கட்டணம் வசூல் செய்யறவங்க கூட கேட்க மாட்டாங்க. இஷ்டத்துக்கு வசூல் பண்றாங்க. அதை கேட்காமல், தொரை எங்களை விரட்டறாரு'ன்னு பொறிஞ்சு தள்ளிட்டாங்களாம்.
இதைக்கேட்ட அதிகாரி முகத்தில, 'ஈ' ஆடலையாமா?'' என, சித்ரா சொன்ன போது, மொபைல் போன் ஒலித்தது.'டிஸ்பிளே'வில், 'திரு முருகன்'என ஒளிரவே, உடனே 'கட்' செய்த சித்ரா, ''இவரு எப்பவுமே இப்டித்தான். மக்கள்கிட்ட அனுசரணையாக நடந்துக்கணும், நானும் பலதடவை சொல்லியும்மாறவே மாட்டேங்குறாரு,'' என்றாள்.
'நல்ல வேளைங்க்கா,கே.வி.ஆர்., நகர் மேட்டர் மாதிரி, இதையும் அமுக்கியிருப்பாங்க,'' என்றாள் மித்ரா.''அதென்னடி, விவகாரம்?'' கேள்வி கேட்டாள் சித்ரா.''அக்கா... அங்கே, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமா செலவு பண்ணி, 'பார்க்' அமைச்சாங்க. ஆனா, சில சமூக விரோதிகள், 'சிசிடிவி' கேமரா, குடிநீர் சுத்திகரிப்பு மெஷினை'லவட்டிட்டு' போயிட்டாங்க''''விஷயம் தெரிஞ்சதும், மாநகராட்சி அதிகாரிங்க வெலவெலத்து போயிட்டாங்க. வெளியே தெரிஞ்சா, பிரச்னை ஆயிடுமுன்னு, 'கான்ட்ராக்டர' பிடிச்சு, அந்த ரெண்டையும் வாங்கி மாட்டிட்டாங்க,''''அதிகாரிகளே இப்படி செய்யலாமா? போலீசில் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதுதானே..!''''அட...அங்கு போயிட்டு இருக்கறதுக்கு, இன்னொரு பில் போட்டு எடுத்துக்கலாம்தானே,' என சிரித்த சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊரில் ஒரு பிரச்னை ஓடிட்டிருக்குது மித்து?''''என்னக்கா பிரச்னை?''''வேட்டுவபாளையம், அப்டிங்கிற கிராமத்தில் ஒரு தனியார் தோட்டத்தில், பல பகுதிகளிலிருந்தும் மருத்துவ கழிவுகளை லோடு லோடாக கொட்டி செல்றாங்களாம்.
இது தெரிஞ்சும் ஊராட்சி நிர்வாகம் கண்டுக்காம இருக்குதாம்; சுற்றுச்சூழலுக்கே அழிவு.வேற பிரச்னை எதாச்சும் ஆகுறதுக்குள்ள தாசில்தார் நடவடிக்கை எடுத்த பரவாயில்லைன்னு, ஊர்க்காரங்க பேசிக்கிறாங்களாம்,''''என்னக்கா, கொடுமை இது. இப்படியும் இருப்பாங்களா?'' என்று வேதனைப்பட்ட மித்ரா, ''கோர்ட்டில் நிறைய போஸ்ட் காலியாக இருக்குதாம்,''''அப்படியா?''''ஆமாங்க்கா. கோர்ட்டில், ஒரு பிரிவில் தயாராகும் ஒரு கோப்பு, மற்றொரு தளத்தில் உள்ள வேறு பிரிவுக்கு கொண்டு சென்று தர ஆள் இல்லையாம். இதனால, பணிகள் தாமதமாகுதுன்னு, புலம்பறாங்களாம்.
அதனால, போதிய ஊழியர்களை நியமிக்கோணும்னு சொல்றாங்க,'' விளக்கினாள் மித்ரா.''ஆமாண்டி மித்து, அப்பதான், உடனுக்குடன் தீர்வு கிடைக்கும்'' ஆமோதித்த சித்ரா, மொபைல் போன் ஒலிக்கவே, ''ஓ... அப்டீங்களா?'' என, ஒரு நிமிடம் பேசிவிட்டு அணைத்தாள்.''அக்கா... என்னங்க்கா விஷயம்?'' ஆர்வத்துடன் கேட்டாள் மித்ரா.''அட... சூரியக்கட்சி மேட்டர்தான். பணப்பிரச்னையில் பெண்ணை மிரட்டிய விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகி மீது போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்களாம்.
அந்த கட்சி தலைமையோட உத்தரவால், அவர் தன்னோட கட்சி பதவியை ராஜினாமா செஞ்சிட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகியோட, தவறாம, எல்லா பங்ஷனிலும் தலைகாட்டிட்டு இருக்றாராம்,''''அதுக்காக... அவர் மேல, ஒரு பெட்டிஷன் தயார் செஞ்சு, தலைமைக்கு அனுப்ப இன்னொரு கோஷ்டி ரெடியாயிடுச்சாம்,'' என சொன்னவுடன், ''சித்ரா... உன்னை தேடிட்டு, 'கோபிநாத்' சித்தப்பா வந்திருக்கார்டி,'' என, அவர் அம்மா குரல் கொடுத்ததும், ''ஒன் மினிட் மித்து, பேசிட்டு வந்துடறேன்,'' என கூறி சென்றாள்.ஆனால், பத்து நிமிடம் கழித்து வந்த சித்ரா, ''சாரிடி, மித்து, அவரு, ஒரு மேட்டர் சொன்னாரு. அதுதான் லேட்டாயிடுச்சு,'' என்றாள்.''அப்படி என்ன அவரு சொன்னாரு?''''பி.என்., ரோட்டில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பக்கத்தில் உள்ள கோவிலையொட்டி, ஒரு நம்பர் லாட்டரி, சக்கைப்போடு போடுதாம். இத் தனைக்கும், 'டிஸ்டிக்ரிட்' கோர்ட் பக்கத்திலேயே இருக்குது,''''ஆனால், போலீஸ் கண்டுக்கறதே இல்லை. தொழிலாளர்கள் நிறைய பேர் கூட்டா வந்து லாட்டரி வாங்கிட்டு போறாங்களாம். கமிஷனரிடம் பலரும், பலமுறை புகார் சொல்லியும் ஒரு 'ஸ்டெப்'பும் எடுக்கலையாம்,''''அக்கா, இவ்வளவு தைரியமாக லாட்டரி ஓடுதுன்னா, கண்டிப்பாக, வைட்டமின் 'ப' கரைபுரண்டு ஓடுமுன்னு நினைக்கிறேன்.
ஏற்கனவே, 'சரக்கு' மேட்டரில், செலவு பண்ற தொழிலாளர்கள், லாட்டரி வாங்கி, மொத்த சம்பளத்தை கரைச்சுட்டாங்கன்னா, அவங்க குடும்பம் ரோட்டுக்கு வந்துடுமே,'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.''உண்மைதான் மித்து, ஆனா, அதிகாரிங்க கண்டுக்கவே மாட்டேங்கிறாங்களே,''''எங்கீங்க்கா? அவங்களுக்குள்ளயே பிரச்னை தீர மாட்டேங்குது? அப்புறம் எப்டி பப்ளிக் பிரச்னையை பார்ப்பாங்க...''''இது எங்கடி?''''இங்க பக்கத்திலதான். சிற்ப தொழிற்சாலை உள்ள ஸ்டேஷனில் உள்ள ஒரு 'இளம்' அதிகாரி, மூத்த அதிகாரியோட, உத்தரவை மதிக்கறதேயில்லையாம்.
அவரு எதை சொன்னாலும், 'ஆப்போஸிட்'டாவே பேசறாராம். இதைப்பத்தி, மேல சொல்லியும் ஒரு பிரயோஜனமும் இல்லையாம். போதாக்குறைக்கு, 'அக்னி நட்சத்திர' ஹீரோ ரேஞ்சுக்கு 'பில்டப்' கொடுக்கறாராம்,''''மித்து, இதே மாதிரி, பாத்திர ஸ்டேஷனில், ஒரு அதிகாரி, எந்த போலீசையும் மதிக்கறது கிடையா தாம்.
எதாவது கேட்டா, எரிஞ்சு விழறாராம். எப்படியும் ஒருநாள் மூத்த அதிகாரிகிட்ட மாட்டுனாங்கன்னா எல்லாம் சரியாயிடும்,'' என்றாள் சித்ரா.''இதுகூட பரவாயில்லைங்க்கா.. பிளாக்கில் சரக்கு வித்தவங்களுக்கு, ஒருத்தர் சப்போர்ட் பண்ணின கதை தெரியுமா?''''அடக்கொடுமையே...''''மாவட்ட எல்லையில் இருக் கிற, கருப்பட்டி ஏலம் நடக்கற ஊர் ஸ்டேஷன் லிமிட்டில், திருட்டுத்தனமா சரக்கு விக்கற இடத்துக்குப்போன ஒரு கட்சிக்காரங்க, 200க்கும் அதிகமான மதுபாட்டிலை எடுத்துட்டு ரோட்டில் வெச்சு போராட்டம் நடத்தினாங்க,'''உடனே, அங்க போன, 'வில்லுக்கு பேமஸான' பேர் கொண்ட குட்டி அதிகாரி, ''நீங்க எதுக்கு புடுச்சீங்க, எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே..' என்று பேசினாராம். ஒரு கட்டத்துக்கு மேல, கட்சிக்காரங்க கொடியை வாங்கி, கீழேவீசிட்டாராம்,''''அப்புறம் என்னாச்சு?''''உயரதிகாரி தலையிட்டு, ஒரு வழியாக கேஸ் போட்டாங்களாம்,'' மித்ரா விளக்கினாள்.''அதிகாரிகள் ஏன்தான் இப்படி பண்றாங்களோ? இங்க பாரு, ஒயிட்டெம்பிள் ஊரில், அதிகாரி ஒருத்தர் ஸ்டேஷனுக்கு சரியா வர்றதில்லையாம்.
அவரை மக்கள் பார்க்க வந்து, ஏமாந்து திரும்பி போறாங்களாம். என்ன ஏதுன்னு, உயரதிகாரி விசாரிச்சா பரவாயில்லை,''''சரி வா... மித்து, ஜெயபால் ஸ்டோர்ஸ்க்கு போய், ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கிட்டு வரலாம்,'' என்றாள்.''ஓ.கே.,'' என்ற மித்ரா திடீரென, ''அக்கா... மறந்தே விட்டேன். இந்த லிங்கேஸ்வரர் ஊரில்...'' என இழுத்தாள்.''சரிசரி... சீக்ரம் சொல்லுடி''''அந்த ஊரில், சமீபத்தில் மின் கம்பிக்கு இடைஞ்சலா இருக்குதுன்னு சொல்லி, மரத்தோட கிளைகளை வெட்டினாங்களாம். ஆனா, இ.பி., காரங்க, இதுக்காக, எங்கயுமே முறையான பெர்மிஷன் வாங்குறதில்லையாம்,''''இதுபோக, வெட்டுற மரத்தை சத்தமில்லாம வித்தறாங்களாம்.
இப்படித்தான், போன வாரம், ஒரு இடத்தில மரத்தை வெட்டியதால், டவுன் பஞ்சாயத்தில் இருந்து, வி.ஏ.ஓ.,கிட்ட புகார் கொடுத்திட்டாங்களாம்,''''ஒரு பக்கம் மரம் வளருங்கன்னு அரசாங்கம் சொல்லுது. இவங்க வெட்டித்தள்றாங்க. எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியலை,'' என கூறியவாறு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா. ஓடி சென்று உட்கார்ந்த மித்ரா, ''அக்கா...'ராமமூர்த்தி'வீதிவழியே போங்க. சீக்ரம் போலாம்,'' என்றதும், அந்த வீதி வழியே வண்டியை ஓட்டினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X