அமிர்தசரஸ்: பஞ்சாபில் ஜோதா பதக் ரயில் விபத்து சம்பவத்தின் ஓராண்டையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் நடந்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜோதா பதக் என்ற பகுதியில், ஜோவ்ரா ரயில்வே கிராங்சிங் அருகே கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்தியாவை உலுக்கி எடுத்த இந்த சோக சம்பவத்தின் முதலாமாண்டையொட்டி பலியானவர்களின் குடும்பத்தினர். நேற்று சம்பவம் நடந்தஅதே இடத்தில் அமர்ந்து அரசின் கவனத்தினை ஈர்க்க ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், விபத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டியும் கோஷம் எழுப்பினர்.