பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் நடந்த பா.ஜ. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி செயல் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.,பி.நட்டா கூறியது, பா.ஜ. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உறுப்பினர் சேர்க்கைகான திட்டம் துவங்கியது முதல் 11 கோடி உறுப்பினர்கள் இருந்த நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 54 நாட்களில் பா.ஜ.வில் புதிதாக 6.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தற்போது பா.ஜ.வில் 17.50 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதற்கு காரணம் காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான நடவடிக்கையும், வெளியுறவு கொள்கையில்மோடியின் செயல்படுகளும் தான் என்றார்.
