பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து 6 வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, சிலநாட்கள் விலை அதிகரிக்கும் அல்லது குறையும் அல்லது எவ்வித மாற்றமுமின்றி முந்தைய நாளில் உள்ள விலை

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news




கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, சிலநாட்கள் விலை அதிகரிக்கும் அல்லது குறையும் அல்லது எவ்வித மாற்றமுமின்றி முந்தைய நாளில் உள்ள விலை நிர்ணயிக்கப்படும்.


latest tamil news




அதன்படி, சென்னையில் இன்று (அக்., 08) தொடர்ந்து 6வது நாளாக விலை குறைந்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 ஆகவும் விற்பனையானது. இன்று, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல், லிட்டருக்கு 18 காசும் டீசல் லிட்டருக்கு 11 காசும் குறைந்துள்ளது.

தற்போது, சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 ஆகவும் உள்ளது. இந்த விலை இறக்கம் தொடர்ந்து 6வது நாளாக நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர் அல்லது சுற்றுலா செல்வோர்களுக்கு இந்த விலைக்குறைப்பு நிச்சயம் மகிழ்ச்சியை தரும்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
09-அக்-201907:52:45 IST Report Abuse
Ashanmugam தொடர்ந்து நான்கு நாட்களாக பைசாவில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து, இன்னும் பெட்ரோல் விலை 70ரூ வந்தபாடில்லை? இதில் என்ன பொதுமக்களுக்கு மகிழ்ச்சி வேண்டி கிடக்கு? எல்லாம் ஊரை ஏமாத்துகிற வேலை என்பதை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
selva -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-201900:48:10 IST Report Abuse
selva 100 லிட்டர் பெட்ரோல் போட்டா 18 ருபாய் மிஞ்சும்..... 100 லிட்டர் பெட்ரோல் போடுறவங்களுக்கு 18 ரூபாய் ஒரு காசே இல்லை..... எந்த வாகன ஒட்டி மகிழ்ச்சி அடைஞ்சிருக்காரு..... ஓவரா ரீல் உடக்கூடாது
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
08-அக்-201919:32:06 IST Report Abuse
வந்தியதேவன் பத்து பைசா, அஞ்சு பைசா குறைந்தத விலை குறைவு...ன்னு பேனர் போடுற நீங்க...? ரெண்டு ரூபா, மூணு ரூபாய் விலை ஏறுகிறபோது... அமுக்கிகிட்டிருக்கீங்களே...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X