பொது செய்தி

இந்தியா

இந்திய எல்லைக்குள் வந்த பாக்., டுரோன்

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
Punjab, Pakistan, drone, Indian border, BSF, alert, பாகிஸ்தான், டுரோன்,  இந்திய எல்லை.

புதுடில்லி: பஞ்சாப் மாநிலத்தில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த டுரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை(பி.எஸ்.எப்.,) தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூரின் ஹதுசைன்வாலா எல்லை பகுதியில், பாகிஸ்தானுக்கு சொந்தமான டுரோன் ஒன்று, நேற்று(அக்.,7) இரவு பறந்து கொண்டிருந்தது. இரவு 10 முதல் 10.40 மணிக்குள் பல முறை பறந்த இந்த டுரோன், 12.15 மணியளவில், இந்திய எல்லையை தாண்டி வந்தது. இதனையறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் , உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பஞ்சாப் போலீசார், உளவுத்துறையினர், பிஎஸ்எப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த டுரோன் மூலம் பயங்கரவாதிகளுக்கு, ஆயுதம் வழங்க முயற்சி ஏதும் நடந்ததா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




கடந்த சில நாட்களுக்கு முன்னர், டுரோன்கள் மூலம், பாகிஸ்தான் ஆயுதங்களை வீசி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் ஒரு டுரோன் இவ்வாறு செய்ததை கண்டறிந்த பிஎஸ்எப் வீரர்கள், மற்றொரு டுரோன் எரிந்த நிலையில் கண்டெடுத்தனர். இதனையடுத்து, வான்வெளி மூலம், ஊடுருவ முயற்சி செய்யும் பாக்., சதியை முறியடிக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என ராணுவத்திற்கும், பி.எஸ்.எப்., வீரர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-அக்-201900:56:57 IST Report Abuse
Rajagopal பாகிஸ்தானில் இந்தியாவிலிருந்து இதே போல டுரோன் பறந்து வந்து வேவு பார்ப்பதாக அவர்களது பத்திரிகையில் வருகிறது.
Rate this:
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
09-அக்-201900:49:15 IST Report Abuse
orange mittai அடித்தால் தான் அடிப்போம்...
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
08-அக்-201922:35:54 IST Report Abuse
adalarasan அதை வீழ்த்துவதை விட்டு விட்டு, எவ்வளவு நேரம் பறந்தது என்று கணக்கு பார்த்துக்கொண்டு, மேல் அதிகாரிகளுக்கு சொல்வதில் என்ன பயன். இதோடு பல முறை, இவ்வாறு நடந்துவிட்டதுஎப்போது நடவடிக்கை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X