ஐ.நா.,வில் பாக்.,கிற்கு இந்தியா மூக்குடைப்பு

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
ஐக்கிய நாடுகள்: ஐ.நா.,வில், காஷ்மீரில் பெண்கள் குறித்த பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில், அரசியல் லாபத்திற்காக பெண்கள் உரிமை பிரச்னையை எழுப்பியதாக கண்டித்துள்ளது.ஐக்கிய நாடுகள் பொது சபையில், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாக்., பிரதிநிதி லோதி பேசுகையில், காஷ்மீரில், மருத்துவம் மற்றும் தகவல்
India,Pakisthan,U.N,United Nations,இந்தியா,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை,பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள்: ஐ.நா.,வில், காஷ்மீரில் பெண்கள் குறித்த பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில், அரசியல் லாபத்திற்காக பெண்கள் உரிமை பிரச்னையை எழுப்பியதாக கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபையில், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாக்., பிரதிநிதி லோதி பேசுகையில், காஷ்மீரில், மருத்துவம் மற்றும் தகவல் தொடர்பு வசதி இல்லாததால், அங்கு பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

இதற்கு ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பவுலோமி திரிபாதி, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல், அளித்த பதில்: வெற்று அரசியல் ஆதாயத்திற்காக, பெண்கள் உரிமை பிரச்னையை ஆயுதமாக்க எந்த இடமும் இல்லை. இன்று, ஒரு குழு, எனது நாட்டின் உள்விவகாரங்களில், தேவையற்ற குறிப்புகளை செய்வதன் மூலம் இந்த நிகழ்ச்சியை அரசியலாக்க முற்படுகிறது. மற்றவர்களின் நிலப்பரப்பை அபகரிக்கும் நாடு, போலி கவலைகளுடன் தனது மோசமான நோக்கங்களை மறைக்கிறது.
கவுரவம் என்ற பெயரில், தனது நாட்டில் பெண்களின் உரிமைகளை பறிப்பவர்களை தண்டிக்காத ஒரு நாடு, எனது நாட்டில், பெண்களின் உரிமைகள் குறித்து பொய்யான தகவல்களை தருகிறது. அந்த நாட்டின் ராணுவத்தினர், பெண்களுக்கு எதிராக நடத்திய பாலியல் வன்முறையை, உலக நாடுகள் என்றும் மறக்காது. ஆண்டுதோறும் நடக்கும் உயர்மட்ட கூட்டத்தில், இந்த கொடூரத்தை இன்றும் கேட்கிறோம். அத்தகைய நம்பகத்தன்மை கொண்ட நாட்டு குழுவுடன், இதற்கு மேலும் விவாதத்தில் ஈடுபடவில்லை.


latest tamil newsஉலகளவில், பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் இருந்த போதிலும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பில், பெண்களுக்கு இன்னும் சில பிரச்னைகள் உள்ளன. இன்றும் பெண் குழந்தைகள் திருமணம் நடக்கிறது. பெண் குழந்தைகள், தொழிலாளர்களாக மாற்றப்படுவதுடன், செக்ஸ் அடிமைகளாகவும் மாற்றப்படுகின்றனர். குழந்தை பேறு மற்றும் கர்ப்பகாலங்களில் ஏற்படும் நோய்கள் காரணமாக தினசரி 800 பெண்கள் மரணம் அடைகின்றனர்.

ஐ.நா.,வின் முதல் பெண் தலைவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் முதல், இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள் வரை ஏராளமான இந்திய பெண்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர். பெண்கள் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்திற்காக நாங்கள் கூட்டாக முயற்சித்து வருகிறோம். இந்தியாவின் வளர்ச்சியில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளது. கொள்கை எடுக்கும் முக்கிய பதவிகளில், இந்தியாவில் பெண்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அடிமட்டத்தில், பொது கொள்கைகள் வகுத்து செயல்படுத்துவதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட 13 லட்சம் பெண் பிரதிநிதிகள் உள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான, வருமான உறுதியளிப்பு திட்டம், நேரடியாக பண பரிமாற்றம், சுகாதார திட்டம் மற்றும் கல்வி ஆகியவை மூலம் லட்சகணக்கானோர் பயன் அடைந்துள்ளனர்.முன்னர், வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியாமல், இருந்த 19.7 கோடி பெண்களுக்கு, தற்போது வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. 'ஸ்டாண்ட் அப் இந்தியா' மற்றும் 'முத்ரா யோஜனா ' திட்டம் மூலம், பெண் தொழில்முனைவோர்கள் ஊக்குவிப்பதன் மூலம், அவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கிறது. 8 கோடி பெண்களுக்கு காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் அவர்களின் உடல்நலம் மேம்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201910:03:19 IST Report Abuse
Sampath Kumar இருக்கிறதே ஒரு மூக்கு அதை பாவம் எத்தனை தடவை உடை பீர்கள் ??
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-அக்-201903:32:57 IST Report Abuse
 nicolethomson பாக்கி முசுகளுக்கு இந்தியர்களின் பீ-v தான் பிடிக்கும் போல
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
08-அக்-201922:20:41 IST Report Abuse
Siva இதுவே இந்திய தேசத்தின் கடைசி சமரச பேச்சு ஆக இருக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X